நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து விலகல்: அமர்த்தியா சென் கடிதம்

AmartyaSen புது தில்லி: நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ள பொருளாதார மேதை அமர்த்தியா சென், மத்திய அரசின் அனுமதி தாமதமாவதால் தாம் இரண்டாவது முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நோபல் பரிசு பெற்றவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அமர்த்தியா சென், பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது முதல் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், அமர்த்தியா சென் மீண்டும் பல்கலைக்கழக வேந்தராக தொடர வேண்டும் என்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமர்த்தியா சென் இரண்டாவது முறையாக மீண்டும் அந்தப் பதவியை வகிப்பதற்காக விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் இந்த விண்ணப்பம் மீது முடிவு எடுக்க மத்திய அரசு தாமதப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் தனது விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவுக்கு அவர் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், ‘‘எனது விண்ணப்பம் மீது முடிவு எடுக்க ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் அதில் அவர்கள் காட்டும் ஈடுபாடில் உறுதியின்மை ஆகியவை நாளந்தா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துக்கும், அதன் கல்வி முறைக்கும் உதவாது. பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு ஒருமனதாக என்னை பதவியில் தொடரும்படி கூறியிருந்தாலும், பல்கலைக்கழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இதன் வேந்தராகத் தொடருவதில் இருந்து நானாகவே விலகிக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories