நமக்கு எதற்கு வருமான வரி? :சுப்பிரமணியம் சுவாமி கேள்வி

Published:

Swamyபுது தில்லி: நமக்கு எதற்கு வருமான வரி? அது தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. சுவாமி தனது டிவிட்டர் பதிவில் இந்தக் கேள்வியை எழுப்பினார். நிலக்கரி ஏலத்தில் அரசுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதே போல் இருந்தால், 2ஜி ஏலத்திலும் கிடைக்கும். அப்படி இருக்கும் போது, நமக்கு வருமான வரி என்பது தேவைதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சுப்பிரமணியம் சுவாமி. சுவாமியின் இந்தக் கேள்வியில் ஓர் உள்ளர்த்தம் உள்ளது. முன்னர் 2ஜி விவகாரத்தில் நடந்ததைப் போல் நாட்டில் ஊழல் முறைகேடு ஏதும் நடக்காமல், சரியான வருவாய் கிடைத்தால், சாதாரண மக்கள் ஏன் வருமான வரி கட்ட வேண்டும்; அந்தத் தேவை எழாதே என்ற தொனியில் அவரது கேள்வி அமைந்திருந்தது. இதன் மூலம் அவர் முன்னர் நடந்த 2ஜி முறைகேட்டைச் சுட்டிக்காட்டி சாடியுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. .  

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img