தாக்கலாகிறது 2015-2016க்கான ரயில்வே பட்ஜெட்

Published:

suresh_prabhu தில்லி: நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று முதல்முறையாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர் தாக்கல் செய்யவிருக்கும் முதல் ரயில்வே பட்ஜெட் இது. 2015-2016 நடப்பு நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது ரயில்வே பட்ஜெட் என்றாலும் இது முதலாவது முழு நடப்பு நிதியாண்டு பட்ஜெட். இதில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பயணிகள் ரயில் கட்டணத்தை 14 சதவீதமாகவும், சரக்குக் கட்டணத்தை 6.5 சதவீதமாகவும் மத்திய பாஜக அரசு உயர்த்தியது. தற்போது டீசல் விலை கணிசமாகக் குறைந்துவிட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், கட்டணத்தைக் குறைப்பது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Related articles

Recent articles

spot_img