மோடி ஆட்சியில் மத வன்முறை அதிகரித்துவிட்டதாம்: சொல்வது அம்னெஸ்டி இண்டர்நேஷனல்

உலகம்

  amnesty-internationalலண்டன்: மோடி பிரதமரான பின்னர் இந்தியாவில் மத ரீதியான வன்முறைகள் அதிகரித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது. 2015-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில் மோடி அரசை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கடுமையாக விமர்சித்துள்ளது. நரேந்திர மோடி ஆட்சியில் மத வன்முறை அதிகரித்துள்ளது. அதன் நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மத ரீதியான மோதல் இந்து முஸ்லீம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அது குற்றம்சாட்டியுள்ளது. மேலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்து அமைப்புகள் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றுவதாக எழுந்துள்ள புகார்களை அது சுட்டிக்காட்டியுள்ளது. மக்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் கருத்துரிமையை ஒடுக்கும் நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.