கேரளா-ரெயிலில் வாக்குவாதம் சக பயணியை கீழே தள்ளி கொலை..

images 26 - 2026

கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாக்குவாதம் முற்றியதில் சக பயணியை கீழே தள்ளி விட்டு கொலை செய்த தமிழக நபரை போலீசார் கைது செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் கோயிலண்டி பகுதியில் ரெயில் தண்டவாள பகுதியில் கிடந்த 25 வயது ஆடவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் மலபார் எக்ஸ்பிஸ் ரெயிலில் பயணித்த இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் மோதல் முற்றியதில், சக பயணியை ஒருவர் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்ட பகுதியை சேர்ந்த சோனைமுத்து (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், அவர் உண்மையை ஒப்பு கொண்டார். இதுபற்றிய வீடியோ ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

அதில், 2 பேரும் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதில், கோபத்தில் கதவு பக்கத்தில் நின்ற சக பயணியை கைது செய்யப்பட்ட பயணி தள்ளி விடுகிறார். வீடியோ சான்றின் அடிப்படையில், அந்நபரை காவலில் எடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தின்போது போதையில் குற்றவாளி இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. விசாரணையில் அந்நபர் யாரென தனக்கு தெரியாது என்றும், பயணத்தின்போது சந்தித்த நபர் என்றும் கூறியுள்ளார். எனினும், அந்த இளைஞரை தள்ளி விட்டதற்கான காரணம் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை. அடையாளம் காணப்படாத அந்த இளைஞர், புலம்பெயர் தொழிலாளி என முதற்கட்ட விசாரணை முடிவில் போலீசார் முடிவுக்கு வந்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதேபோன்ற மற்றொரு சம்பவம் கோழிக்கோட்டில் கடந்த மாதம் நடந்தது. உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளியான விவேக் என்பவர் கண்ணூர் எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் பயணித்தபோது, நண்பரான முபாதூர் இஸ்லாம் என்பவரால் கீழே தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வடகரா ரெயில் நிலையத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories