
மிதமிஞ்சிய சொத்து சேர்ப்பு காரணமாக பிரபல கேரள யூடியூபர்களை குறிவைத்து வருமானவரித்துறை நடந்து வருகிறது.
கேரளா முழுவதும் பிரபல யூடியூபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர். சில யூடியூபர்கள் விலையுயர்ந்த நிலம், கட்டடங்கள் மற்றும் சொத்துக்களை வாங்கியதை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.
கேரளா முழுவதும் பிரபல யூடியூபர்ஸ் வீடுகள் மற்றும் அவரது அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். யூடியூபர்கள் பலர் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்தவில்லை என்பதால், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
கேரளாவில் உள்ள பிரபல யூடியூப் பயனர்கள் பலர் ஆண்டு வருமானம் ரூ.2 கோடிக்கு மேல் உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.