
வல்லரசுப் பட்டியலில் 3வது இடத்தில் பாரதம்: பிரதமர் மோடி சூளுரை!
देशवासियों को PM Modi की गारंटी, Third Term में दुनिया का Top Three Economy बनेगाा भारत
”தற்போது இருப்பதை விட வேகமான வளர்ச்சி விகிதத்துடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், 2,700 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ‘பாரத் மண்டபம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசியது…
நண்பர்களே, இன்று நமது அரசாங்கத்துடைய செயல்பாடுகளை, மேலும் கடந்த ஆட்சிக்காலச் செயல்பாடுகளின் விளைவுகளை, நாடுமுழுவதும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
இன்று, தேசத்தின் நம்பிக்கை நன்கு உறுதிப்பட்டு விட்டது, அதாவது, பாரதத்தினுடைய வளர்ச்சிப் பயணம், தடைப்படப் போவது இல்லை. உங்களுக்கு நினைவிருக்கிறதா, நம்முடைய முதல் ஐந்தாண்டுகள் தொடக்கத்தில், பாரதம், உலகப் பொருளாதார வரிசையில் 10ஆம் இடத்தில் இருந்தது. எனக்கு நீங்கள்…. பணியளித்த போது, அப்போது நாம் 10ஆம் இடத்தில் இருந்தோம்.
இரண்டாவது ஆட்சிக்காலத்திலே பாரதம், உலகின் 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாகும். மேலும் இது கடந்தகாலச் சாதனைகளின் ஆதாரத்தின்படி, போகிற போக்கில் பேசுவது கிடையாது. செயல்பாடுகளின் அடிப்படையிலே நான் கூறுகிறேன். நான் தேசத்திற்கு மேலும் ஒன்றை உறுதியளிக்க விரும்புகிறேன், அதாவது 3ஆவது ஆட்சிக்காலத்திலே, 3ஆவது ஆட்சிக்காலத்திலே, உலகத்தின், முதல் மூன்று பொருளாதாரங்களிலே, ஒரு பெயர் பாரதத்தினுடையதாக இருக்கும்.
அதாவது, 3ஆவது ஆட்சிக்காலத்திலே, முதல் மூன்று பொருளாதாரங்களிலே, பெருமிதத்தோடு, ஹிந்துஸ்தானம் நிமிர்ந்து நிற்கும் நண்பர்களே. 3ஆவது ஆட்சியிலே, தலைசிறந்த 3 பொருளாதாரங்களில் இடம் பெற்றே தீரும் பாரதம்.
மேலும் இது, மோதியளிக்கும் காரண்டி ஆமாம். நான் நாட்டுமக்களுக்கு, மேலும் ஒரு நம்பிக்கையளிக்க விரும்புகிறேன். அதாவது 2024ற்குப் பிறகு, நம்முடைய மூன்றாவது ஆட்சியின் போது, தேசத்தின் வளர்ச்சிப் பயணம், மேலும் வேகமாக முன்னேறும்.
என்னுடைய மூன்றாவது பணிக்காலத்திலே, நீங்கள் உங்களுடைய கனவுகள், உங்கள் கண்களுக்கு முன்பாகவே மெய்ப்படுவதைக் காண்பீர்கள்.