
திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரிய செய்திகள் தெரிவிப்பதாவது…
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் வண்டி எண் 16361/16362 என்ற ண்னுடன் நிரந்தர சேவையாக வாரந்தோறும் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் வேளாங்கண்ணியில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் இயக்கிட ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. நிரந்தர சேவைகள் இயக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரமிருமுறை சேவையுடன் பாலக்காடு கோவை ஈரோடு சேலம் காட்பாடி சித்தூர் வழியாக கொல்லம் – திருப்பதி வாரமிருமுறை மற்றும் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி நீட்டிப்பு ஆகியவற்றிக்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருவனந்தபுரம் மதுரை அமிர்தா ரயில் ராமேஸ்வரம் வரை நீடித்தது இயக்கவும் ரயில்வே வாரியம் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆனால் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் குருவாயூர் புனலூர் விரைவு ரயில் மதுரை வரை நீடித்தது இயக்க ரயில்வே வாரியம் இதுவரை ஒப்புதல் வழங்காதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும் இதுகுறித்து ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்த போது புனலூர் செங்கோட்டை இடையிலான ரயில் பாதை மின் மயமாக்கல் பணிகள் நிறைவடைந்த உடன் இந்த ரயில் மதுரை வரை நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
அதுபோல் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வார விடுமுறை விரைவு ரயிலுக்கு கேரளத்தில் கொல்லம் புனலூர் பின் செங்கோட்டை நிறுத்தங்களை அடுத்து ராஜபாளையம் நிறுத்தமே வழங்கப்பட்டுள்ளது தென்காசி ரயில் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென்காசி சங்கரன்கோவில் ஆகிய இரு தயிர் நிறுத்தங்களிலும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.