
தில்லியில் ஜி 20 உச்சி மாநாடு தொடங்கியது. பிரதமர் மோடி முன்னுள்ள நாட்டின் பெயர்ப்பலகையில் பாரத் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தில்லி பிரகதி மைதானத்தில் ஜி20 மாநாடு தொடங்கியது. பாரத் மண்டபத்திற்கு வந்த உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
இந்தியா தலைமை தாங்கும் ஜி 20 மாநாடு தில்லியில் இன்று தொடங்கியது. 18ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உலகத் தலைவர்கள் தில்லி வந்துள்ளனர். ஜோ பைடன், ரிஷி சுனக், இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் தில்லி வந்துள்ளனர்.
2 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம், சர்வதேச கடன் கட்டமைப்புச் சீர்திருத்தம், கிரிப்டோகரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
பிரதமர் மோடி, பின்னர் உரையாற்றினார். அப்போது ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக ஜி20 அமைப்பில் இணைக்க பிரதமர் மோடி முன்மொழிந்தார். அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவிக்க, நிரந்த உறுப்பினரானது.
பின்னர், பிரதமர் மோடி ஆப்பிரிக்க யூனியனின் தலைவரை வரவேற்று, அவரது இருக்கையில் அமர கேட்டுக்கொண்டார்.
பிரதமர் முன்மொழிந்ததும், உலகத் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்டி ஆப்பிரிக்க யூனியனை வரவேற்றனர். இதனால் ஜி20 அமைப்பு இனிமேல் ஜி21 ஆகிறது.
பிரதமர் மோடி முன்னுள்ள நாட்டின் பெயர்ப்பலகையில் பாரத் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாரத் மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டில் பாரத் என்ற பெயருடன் பிரதமர் மோடி அடையாளப்படுத்தினார்