
முதல்வர் வாய் கூசாமல் பொய் சொல்வதா ? என்று தமிழக பாஜக., மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை”
விளையாட்டு துறை அமைச்சகத்தை கவனித்து வரும் நடிகர் உதயநிதி பேசியதை, அவர்கள் கூட்டணி கட்சிகளே கடுமையாக கண்டித்து கொண்டு இருக்கும் போது , ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடியை கண்டித்து அறிக்கை விடுகிறார் !
அரசியல் சார்ந்த கண்டனங்கள் ஒரு புறம் இருந்தாலும் , போகிற போக்கில் வாய் கூசாமல் ஒரு சரித்திரப் பொய்யை கூறி இருக்கிறார் ஸ்டாலின் !
இந்தியாவிலேயே முதல் முதலாக திமுக தான் பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது என்றும், சனாதனம் அதை கொடுக்க மறுத்தது என்றும் கூறி உள்ளார் !
ஸ்டாலினுக்கு துண்டு சீட்டில் எழுதி கொடுத்தவரை நிச்சயம் மாற்ற வேண்டும் ! ஏற்கனவே சுதந்திர தினத்தை தவறாக எழுதி கொடுத்தது போல , இப்போதும் தப்பு தப்பாக எழுதி கொடுத்து உள்ளார் !
காரணம் , இந்தியாவில் முதல் முதலில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் இயற்றியது ஆந்திர பிரதேசம் !
காங்கிரசை எதிர்த்து கட்சி உருவாக்கிய NTR அவர்கள்… அதாவது வெளிப்படையாக காவி உடை உடுத்தி சனாதன தர்மத்தின் பக்கம் நின்ற தேசியவாதியான என். டி .ஆர், அவர்கள் 1986 ஆம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்கும் சட்டத்தை இயற்றினார் !
அதை அப்படியே வரிக்கு வரி மாறாமல் ஆந்திரா என்று இருக்கும் இடத்தில தமிழ்நாடு என்று மட்டும்
இப்போது மோடி திட்டங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசின் திட்டங்கள் போல காண்பிப்பது போல அப்போதும் மாநிலத்தின் பெயரை மட்டும் மாற்றி 13 ஆண்டு கழித்து 1989ம் ஆண்டு கொண்டு வந்தது திமுக
ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கம் திமுகவிற்கு இன்று நேற்று வந்த பழக்கம் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது !
கண்டனம் தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வரலாற்றை அவர்களின் இஷ்டத்திற்கு திரிப்பதை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது !