பாரதத்துடன் மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்க அசத்தல் திட்டம்!

modi in g20 - 2026
#image_title

மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இந்தியாவுடன் இணைக்க போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகப் பெரிய ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தொடங்கவுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

தில்லியில் ஜி20 மாநாட்டுக்கு இடையில் அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் தொடங்கவுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத மிகப் பெரிய அடிப்படை கட்டமைப்பு திட்டமாகும். இதன் மூலம் வர்த்தகம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வளர்ச்சி பெறும்.

இத்திட்டம் அடிப்படை கட்டமைப்பில் மிகப்பெரிய இடைவெளியை நிரப்பும். உயர்த்தத் தரம், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், நிலையானதாகவும் யாரையும் கட்டாயப்படுத்தாத வகையிலும் இருக்கும்.

இந்த திட்டம் உலகின் 3 பிராந்தியங்களை இணைப்பதால் செழிப்பைஏற்படுத்தும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் அடிப்படை கட்டமைப்பில் உள்ள மிகப்பெரிய இடைவெளியை நிரப்பும். மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல், பாதுகாப்பின்மை குறையும். பிராந்திய இணைப்பு அதிகரிக்கவும் இது உதவும்.

இஸ்ரேல், சவுதி அரேபியா இடையே சீரான உறவு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நாடுகள் இடையே முறையான தூதரக உறவுகள் தொடங்கிய பிறகு இஸ்ரேலும் இத்திட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் சண்டை சச்சரவுகளை தீர்க்கவும் ஸ்திரத்தன்மை, பிராந்திய இணைப்புகளை அதிகரிக்கவும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டம் அதற்கு உதவியாக இருக்கும்… என்று கூறினார் ஜான் ஃபைனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories