ஸ்ரீதேவியின் வயது 52 என்று குறிப்பிடப் பட்ட எம்பால்மிங் சான்றிதழ்!

Published:

மும்பை:

துபையில் நடைபெற்ற உறவின் முறை திருமண நிகழ்வு ஒன்றுக்காகச் சென்றிருந்த 54 வயதான நடிகை ஸ்ரீதேவி, திடீரென மயங்கிய நிலையில் அங்குள்ள ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை காலமானார். நடிகை ஸ்ரீதேவியின் உடல், இந்தியா கொண்டு வரப் படுவதற்காக, பதப் படுத்தும் ஒரு பணியாக எம்பால்மிங் செய்யப் பட்டது. இது தொடர்பான சான்றிதழும் அளிக்கப் பட்டுள்ளது.

ஸ்ரீதேவி உடலை எம்பால்மிங் செய்த சான்றிதழை குடும்பத்தாரிடம் வழங்கியிருக்கிறார்கள். அதில், ஸ்ரீதேவியின் வயது 52 என்று பதியப் பட்டுள்ளது.

துபையில் காலமானதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த சான்றிதழில், தேதி 24/02/2018 என்று குறிப்பிட்டுள்ளார்களே தவிர, நேரத்தைக் குறிப்பிடவில்லை.

embalming certificate - 2026

Related articles

Recent articles

spot_img