IPL 2024: முதல் அரையிறுதி ஆட்டம்; கொல்கத்தா வெற்றி!

ipl 2024 - 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

முதல் அரையிறுதி ஆட்டம்
கொல்கொத்தா vs சன்ரைசர்ஸ் – 21.05.2024

          இன்று முதல் அரையிறுதி ஆட்டம் அகமதபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

          ஹைதராபாத் அணியை (19.3 ஓவரில் 159, ராகுல் திரிபாதி 55,  கிளாசன் 32, பாட் கம்மின்ஸ் 30, மிட்சல் ஸ்டார்க் 3/34, வருண் சக்ரவர்த்தி 2/26) கொல்கொத்தா அணி (13.4 ஓவரில் 164/2, ஷ்ரேயாஸ் ஐயர் 58, வெங்கடேஷ் ஐயர் 51, ரஹ்மானுல்லா குர்பாஸ் 23, சுனில் நரேன் 21) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன்), மற்றும் அபிஷேக் ஷர்மா (3 ரன்)அதிர்ச்சித் தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி (35 பந்துகளில் 55 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) சற்று நிலைத்து ஆடினார். ஆனால்  நிதீஷ் குமார் ரெட்டி (9 ரன்), ஷபாஸ் அகமது (பூஜ்யம் ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆடவந்த கிளாசன் (21பந்துகளில் 32 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), அப்துல் சமது (16 ரன்) அணிக்கு ரன் சேர்க்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் ஆட்டம் கொல்கொத்தா அணியின் கைக்குள் வந்துவிட்டது. சன்வீர் சிங் (பூஜ்யம் ரன்), புவனேஷ் குமார் (பூஜ்யம் ரன்), விஜய்ஸ்கந்த் (7 ரன்) ஆகியோரால் குறைவான் ரன்னே எடுக்க முடிந்தது. எனினும் பேட் கம்மின்ஸ் (24 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அதிரடியால் ஹைதராபாத் அணி 19.3 ஓவரில் 159 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.

          160 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கொத்தா அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (23 ரன்), மற்றும் சுனில் நரேன் (16 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) சிறப்பாக ஆடினார்கள்.

இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த வெங்கடேஷ் ஐயர் (28 பந்துகளில் 51 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (24 பந்துகளில் 58 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் இணைந்து ஆடி, வேகமாக ரன் சேர்த்து 13.4 ஓவரில் தேவையான் ரன் (164/2) எடுத்து, அந்த அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர்.   

          கொல்கொத்தா அணியின் மிட்சல் ஸ்டார்க் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா அணி இறுதி ஆட்டத்தில் நுழையும் முதல் அணியாகிறது.

நாளை அகமதாபாத்தில் ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் ஹைதராபாத் அணி 24.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories