இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. தவான் அதிரடியாக 90 ரன்களும், பாண்டே 37 ரன்களும் அடித்தனர். 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெராரே 37 பந்துகளில் 66 ரன்கள் எடுத்ததே வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சு இன்று எடுபடவில்லை என்றே சொல்ல வெண்டும். எக்ஸ்ட்ராஸ் மட்டுமே 11 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.