இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி-20 கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில், இந்திய- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து 175 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது. தற்போது 15 ஓவர்கள் முடிவில் 137 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து விளையாடி வருகிறது.



