பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பதிநாலாம் நாள் – 09.08.2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆகஸ்ட் 9 ஆம் தேதி, இந்திய தடகள வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் மற்றும் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் விளையாடுவார்கள்.
கோல்ஃப்
பெண்களுக்கான தனிப்பட்ட ஸ்ட்ரோக் விளையாட்டு சுற்று 3 – திக்ஷா தாகர், அதிதி அசோக் இருவருக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக அமையவில்லை.
தடகளம்
பெண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் 1 – ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா எம்.ஆர். பெண்கள் அணி 3:32:51 நேரத்தில் 4 x400 மீ ஓட்டத்தை ஓடி ஹீட் இரண்டில் எட்டாம் இடம் பிடித்தார்கள்.
ஆண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் 1 – முஹம்மது அனஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ். ஆண்கள் அணி 3:00:58 நேரத்தில் தங்களது 4×400 மீ ஓட்டத்தை ஓடி முடித்தார்கள். இது அவர்களது சிறப்பான சாதனை நேரம். ஆனால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறவில்லை.
மல்யுத்தம்
ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ வெண்கலப் பதக்கப் போட்டி – அமன் செஹ்ராவத் vs டேரியன் டோய் குரூஸ் (புவேர்ட்டோ ரிக்கோ) இரவு 2145க்கு நடக்கவுள்ளது.