இந்தியா- வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – நான்காம் நாள் – 30.09.2024
முனைவர்கு.வை. பாலசுப்பிரமணியன்
வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ் 233 (மோமினுல்107*, பும்ரா 3-50, ஆகாஷ் தீப் 2-43)
இரண்டாவது இன்னிங்க்ஸ் (இரண்டு விக்கட்இழப்பிற்கு 26 ரன்)(ஜாகிர் 10, ஷத்மான் 7*, அஷ்வின் 2-14)
இந்தியஅணி முதல் இன்னிங்க்ஸ் 285 க்கு 9 டிக்ளேர்டு (ஜெய்ஸ்வால் 72, ராகுல் 68, மெஹிதி 4 -41, ஷகிப் 4-78).
இந்திய அணி 26 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டபிறகு இன்று நான்காம் நாள் கிரிக்கெட் விளையாடப்பட்டது.வேகமாக ரன் அடித்த இந்தியாசில டெஸ்ட் சாதனைகளை முறியடித்தது. ரோஹித் ஷர்மா தனது ஒயிட்-பால்கிரிக்கெட் டெம்ப்ளேட்டை நீட்டினார்.
அவர் 11 பந்துகளில் 23 ரன்களை விளாசினார், மற்ற இந்திய வீரர்களும்இதே போல அதிரடி ஆட்டத்தைப் பின்பற்றினர். அந்த அணுகுமுறையால் அவர்கள்ஆடவர் டெஸ்டில் அதிவேகமாக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்களை பதிவு செய்தனர், மேலும் பங்களாதேஷ் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, அவர்களின் முதல் இன்னிங்ஸை வெறும் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தனர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் 35 ஓவருக்கு வங்கதேசஅணி மூன்று விக்கட் இழப்பிற்கு 107 ரன் எடுத்திருந்தது. அடுத்த இரண்டு நாட்களும் ஆட்டம்மழையாலும் ஈரமான ஆடுகளத்தாலும் நடக்கவில்லை. இன்று நான்காம் நாள் வங்கதேச அணியின் முதல்விக்கட் (முஷ்ஃபிகுர் ரஹிம்) 41ஆவது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து லிட்டன் தாஸ் ஐம்பதாவது ஓவரில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஐம்பத்தி ஆறாவதுஓவரில் அஷ்வின் ஷாகிப் அல் ஹசனை ஆட்டமிழக்கச்செய்தார். அதற்கடுத்த நாலு விக்கட்டுகளும்70ஆவது ஓவரில் இருந்து 75ஆவது ஓவருக்குள் விழுந்தன. வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை ஆடவந்தபோதுரோஹித் ஷர்மா டி20 மேட்ச் ஆடும் மூடில் இருந்தார். இந்திய அணி 19 பந்துகளில் 50 ரன்எடுத்தது. ரோஹித் ஷர்மா 11 பந்துகளில் 23 ரன் எடுத்து அவுட் ஆனார்.
முன்னதாக, இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல்ஆகியோர் முறையே 141.17 மற்றும் 158.13 என்ற விகிதத்தில் அரைசதங்களைஅடித்தனர், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு டெஸ்டின் இறுதி நாளின் இறுதி நாளின் இறுதி நேரத்தில் வங்காளதேசத்தின் பேட்டர்களை மற்றொரு ஷாட் கொடுத்தனர்.
மெஹிடிஹசன் மிராஸ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர்தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் பின்னர் இந்திய அணி 62 பந்துகளில்100 ரன்; 112 பந்துகளில் 150 ரன்; 148 பந்துகளில் 20 ரன்; 183 பந்துகளில் 250 ரன் –இவையனைத்தும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்று நிகழ்த்திய சாதனைகளாகும்.
9 விக்கட் இழப்பிற்கு 285 ரன் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால் வங்கதேச அணி சுமார் 45 நிமிடங்களுக்கு இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடவந்தது.
பும்ரா, ஆகாஷ்தீப் இருவரும் சிறப்பாக பந்துவீசினர்.ஆனால் அஷ்வின் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களுக்கு வங்கதேசஅணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 26 ரன் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 26 ரன்கள் முன்னிலையில் உள்ளது.