December 9, 2024, 6:32 AM
25.7 C
Chennai

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு; புதிய மேல்சாந்தி பதவியேற்பு!

ஸ்ரீ கோவில் நடைதிறந்து இவ்வாண்டு சபரிமலை மேல்சாந்தியாக பதவியேற்கும் பிரம்ம ஸ்ரீ அருண்குமார் நம்பூதிரி அவர்களுக்கு தந்த்ரி ப்ரம்மஸ்ரீ கண்டரரு ராஜீவரு கலசாபிஷேகம் செய்வித்து மேல்சாந்தியாக ஸ்ரீ கோவிலின் உள்ளே அழைத்துச் செல்லும் நிகழ்வு ஸ்வாமியே சரணம் ஐயப்பா

இவ்வாண்டு சபரிமலை மேல்சாந்தியாக புதிதாக பதவியேற்ற பிரம்ம ஸ்ரீ அருண்குமார் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்து நெய் தீபம் ஏற்றி வைத்து 41 நாள் மண்டல பூஜை வழிபாட்டை இன்று பக்தர்கள் சரண கோஷம் முழங்க துவக்கி வைத்தார்.

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக வெள்ளி மாலை திறக்கப்பட்டது.

மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி தந்திரி கண்டரரூ ராஜீவரு முன்னிலையில் நடை திறந்து தீபம் ஏற்றி அணையா தேங்காய் ஆழியில் தீபம் ஏற்றி வைத்தார்.

இந்த கார்த்திகை மாதம் முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்யும் மேல் சாந்திகள் சபரிமலை -அருண்குமார் நம்பூதிரி, மாளிகைபுறம் – வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை அழைத்து சன்னிதானம் முன் அழைத்து வந்து பிரசாதம் வழங்கினார்.

புதிதாக பதவியேற்ற மேல்சாந்தி இருவருக்கும் தந்திரி ஐயப்பன் மந்திரம் காதில் ஓதி முறைப்படி சன்னிதானம் அழைத்து வந்து ஐயனின் முன் பூஜைகள் செய்தார்.

ALSO READ:  அமைச்சர் பேரச் சொல்லி ரூ.41 லட்சம் சுருட்டிய திமுக., நிர்வாகி மீது புகார்!

தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அவர் இவர்களுக்கு அபிஷேகம் நடத்தி முறைப்படியாக பதவி ஏற்க செய்யும் நிகழ்வு நடைபெற்றது. வேறு விசேஷ பூஜைகள் கிடையாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டடது.

இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி நடை திறந்து ஐயன் சன்னிதானத்தில் நெய் தீபம் ஏற்றி வைக்க 41நாள் மண்டல பூஜை வழிபாடுகள் விமர்சையாக துவங்கியது. தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்ததும் இந்த ஆண்டுக்கான பக்தர்கள் கொண்டு வந்த நெய்யால் மண்டல கால நெய் அபிஷேகம் துவங்கியது.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் திருவிதாங்கோடு தேவசம் போர்டு தீவிரமாக களமிறங்கியுள்ளது. கடந்த ஆண்டு போல பிற மாநில அரசுகள் குறை சொல்லும் அளவுக்கு நிலைமை செல்லாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

பம்பையில் பக்தர்கள் மழை பாதிப்பு உள்ளிட்டவற்றால் சிரமப்படாமல் இருக்க ஏழு கியூ காம்ப்ளக்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பம்பை ராமமூர்த்தி மண்டபத்தின் அதே அளவில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் புதிய பந்தல் கட்டப்பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை நகரில் சிட்டி பஸ்களாக செயல்படும் ஆட்டோக்கள்!

ஆன்லைன் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக பம்பை மணல் பரப்பில் ஸ்பாட் புக்கிங் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நிலக்கல் அல்லாமல் பம்பை ஹில் டாப் மற்றும் சக்குப்பாலத்தில் பார்க்கிங் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு கூடுதல் வசதி கிடைத்துள்ளது. 18 படிகளில் இந்த சீசனில் அனுபவம் நிறைந்த போலீசார் மட்டுமே பக்தர்களுக்கு உதவ நியமிக்கப்படுவார்கள்.

இதற்காக கடந்த சித்திரை ஆட்டத் திருவிழா பூஜையின் போது படி ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 18 படிகளுக்கு மேலே நகரும் கூரை பணியும் முடிந்துள்ளது.

சன்னிதானத்தில் பக்தர்கள் மழை நேரத்தில் படும் சிரமங்களை தடுப்பதற்காக வடக்கு பகுதியில் தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

40 லட்சம் டின் அரவணை தற்போது இருப்பில் உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் . இதனால் சீசன் தொடங்கி கூட்டம் மிக அதிகரித்தாலும் பிரசாதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.09 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பட்ஜெட் கூட்டத் தொடருக்கான பாரதிய கிசான் சங்கத்தின் பரிந்துரைகள்!

சேனா-கோட்டா-பங்கங்கா திட்டம்: தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களும் பயன்பெறும் வகையில், அதை முடிக்க போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.