
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது.
அதன் இரண்டாம் பகுதி…
வினா – தொடக்கத்திற்குச் செல்வோம். மிக எளிய நிலையிலிருந்து உயர்ந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக ஆனீர்கள். இது பலருக்கு உத்வேக காரணியாக இருக்கும் என்பது உண்மை. உங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம், நீங்கள் ஓர் அறை இருக்கும் வீட்டில் வளர்ந்தீர்கள், மண் தரை, குடும்பம் மொத்தமும் அதில் வசித்தது. உங்கள் சிறுவயது பற்றிச் சொல்லுங்கள். எப்படி உங்கள் எளிய தொடக்கம் உங்களை உருவாக்க உதவியது.
மோதிஜி – நான் பிறந்தது, குஜராத்தில் நடந்தது. மேலும் குஜராத்திலே, வடக்கு குஜராத்திலே… மெஹ்சானா மாவட்ட த்திலே. வட்நகர் என்றதொரு சிறிய குடியிருப்புப் பகுதியிலே. உள்ளபடியே அந்த இடம் மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கே, அங்கே தான் நான் பிறந்தேன். அங்கே தான் நான் படித்தேன். இப்போது நாம், இன்றைய உலகைப் பார்க்கும் போது நான் கிராமத்தில், அங்கே வசிக்கும் காலத்தில், நான் வாழ்ந்த சூழ்நிலையில், என் கிராமத்திற்கென்று சில சிறப்பம்சங்கள் உண்டு.
பார்க்கப் போனால் உலகத்திலே, இது மிகவும் அரிதான ஒன்று. நான் பள்ளிக்கூட த்திலே படிக்கும் போது, அப்போது என் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் இருந்தார், அவர் எப்போதுமே கூறுவார், பிள்ளைகளா நீங்கள் எங்கு சென்றாலும் கூட, எந்த இடத்திலும், எங்காவது ஏதோ, செதுக்கப்பட்ட கடிதங்கள் ஏதாவது காண நேர்ந்தால் அல்லது வரையப்பட்ட கடிதங்கள் கிடைத்தால், செதுக்கப்பட்ட சிற்பம் ஏதும் கிடைத்தால் அதைப் ப்ள்ளியின் இந்த மூலையில் சேகரித்து வையுங்கள் என்பார்.
எனக்கு இதில் ஆர்வம் அதிகரித்த போது புரிய வந்த போது தெரிய வந்தது, எங்களுடைய கிராமம் பழமையானது வரலாற்றுப்பூர்வமானது, பள்ளியில் விவாதம் நடக்கும் அதிலிருந்தும் தகவல்கள் கிடைத்தன. பின்னர் ஒரு காலம் சீனா ஒரு படத்தைத் தயாரித்தார்கள். நான் அந்த திரைப்படம் தொடர்பாக செய்தித்தாள் ஒன்றில் படிக்க நேர்ந்தது.
சீனத் தத்துவ ஞானி ஹுவான் சுவாங், அவர் என் கிராமத்தில் கணிசமான காலம் வாந்திருக்கிறார். பல நூற்றாண்டுகள் முன்பாக வந்திருக்கிறார். பௌத்த கல்வியின் ஒரு பெரிய மையமாக இருந்திருக்கிறது. நான், அது தொடர்பாகத் தெரிந்து கொண்டேன். பிறகு, சுமார், 1400இலே, அது பௌத்த கல்வியின், மையமாக இருந்திருக்கிறது. 12ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வெற்றிச்சின்னம், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஆலயம், 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு சகோதரிகள் இவர்கள் சங்கீதத்தில் மிகப்பெரிய, நிபுணர்களாக இருந்தார்கள். தானாவும் ரீரியும். இப்படி ஏராளமான விஷயங்கள் வெளிவரத் தொடங்கின.
என் சிந்தையை ஈர்த்தன. நான் முதல்வராக ஆன போது…. நான் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டேன். அகழ்வாய்ப்பு பணியை மேற்கொண்ட போது தெரிய வந்தது, இது அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான புத்த பிக்குக்களின் மையமாக இருந்து வந்திருக்கிறது. மேலும் பௌத்த ஜெயின் ஹிந்து, மூன்று பாரம்பரியங்களின் தாக்கம் அங்கே இருந்திருக்கிறது. மேலும், எங்களுக்கு வரலாறு புத்தகங்களோடு மட்டும் நின்று போகும் விஷயமாக இருக்கவில்லை.
அங்கே, ஒவ்வொரு கல்லும் பேசியது. ஒவ்வொரு சுவறும் பல்லாயிரம் கதைகள் சொல்லின. பிறகு நாங்கள், அகழ்வாய்வு செய்யும் பணிகளைத் தொடங்கிய போது, அங்கே கிடைத்த பொருட்கள் வரலாற்றுரீதியான மகத்துவம் வாய்ந்தவை. இதுவரை அங்கே 2800 ஆண்டுகள் வரையான, சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இது உள்ளபடியே, மிகப்பெரிய வகையிலே, அழிக்கமுடியா அளவுக்கு, 2800 ஆண்டுகளுக்கு முன்பு வசிப்பிடமாக இருந்தது. மனிதர்கள் அங்கே வாழ்ந்தார்கள், 2800 ஆண்டுகள் முன்பான அவர்கள் வளர்ச்சி எப்படி இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
இப்போது அங்கே சர்வதேச தரத்திலான ஒரு, அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டிருக்கிறது, மக்கள் பார்க்கலாம். குறிப்பாக அகழ்வாய்வு மாணவர்களுக்கு இது ஒரு பெரிய, ஆய்வுக் களமாக ஆகியிருக்கிறது. என்ன கூற வருகிறேன் என்றால் நான் பிறந்த இடத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்தும் இருக்கிறது. என்னுடைய நற்பேற்றைப் பாருங்கள் சில விஷயங்கள், எப்படி நடக்கின்றன என்று தெரியாது. காசி என் கர்மபூமியாக ஆனது. பாருங்கள் காசியும் என்றும் அழியாதது.
காசியை பனாரஸ் வாராணசி என்றெல்லாம் அழைப்பார்கள். அதுவும் கூட பல்லாயிரம் ஆண்டுகளாக, நிரந்தரமான உயிர்ப்புடைய ஒரு நகரம். ஒருவேளை இது இறைவனால் நியமிக்கப்பட்ட ஏற்பாடாக இருக்கலாம் வட்நகரில் பிறந்த ஒரு மனிதன், காசிக்குச் செல்கிறான், அதைத் தனது கர்மபூமியாக்கி இருக்கிறான், அன்னை கங்கையின் திருப்பாதங்களில் வாழ்கிறான். அதே வேளையிலே, என்னுடைய குடும்பத்திலே தந்தையார் இருந்தார் தாய் சகோதர சகோதரிகள், என்னுடைய சித்தப்பா சித்தி என் தாத்தா பாட்டி அனைவரும், கூட இருந்தார்கள்.
இப்போது நாம் இருக்கும் இந்த அறை கூட பெரியதாக இருக்கிறது. அதிலே ஜன்னலேதும் கிடையாது ஒரு சிறிய கதவு உண்டு. அங்கே தான் பிறந்தோம் அங்கே தான் வளர்ந்தோம். இப்போது இங்கே தான் ஏழ்மை வருகிறது. இன்றைய நிலையிலிருந்து பார்த்தோம் என்றால் பொதுவாழ்க்கைக்கு மக்கள் வருவதைப் பார்க்கும் போது, என்னுடைய வாழ்க்கை கொடூரமான ஏழ்மையிலே தான் கழிந்தது. ஆனால் நாங்கள் என்றுமே, ஏழ்மையை, ஒரு சுமையாகவே கருதியதில்லை. ஏனென்றால் எந்த மனிதன் நேர்த்தியான காலணி அணிபவரோ, அவரிடம் காலணி இல்லாது போனால், அது அவருக்குக் கஷ்டமாக இருக்கும்.
நாங்களோ வாழ்க்கை முழுவதும் காலணி அணீந்ததே இல்லை எனும் போது, காலணி அணிவது எத்தனை சிறப்பு என்பது எங்களுக்கு எங்கே தெரியும்!! அதை ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையிலேயே நாங்கள் இல்லை. அப்படித் தான் நாங்கள் வாழ்ந்தோம். மேலும் எங்களுடைய தாயார், அவர் கடுமையாக உழைப்பார். எங்கள் தந்தையார் கடும் உழைப்பாளி எங்கள் தந்தையாரின், சிறப்புத் தன்மை என்னவென்றால் எத்தனை ஒழுங்குமுறை நிறைந்தவர் என்றால், காலை 4-4.30 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். நிறைய, கோயில்களுக்குச் சென்ற பிறகு தான் அவர் கடைக்குச் செல்வார். அவர் ஒரு தோல்காலணியை அணிந்திருப்பார், அது கிராமத்திலேயே தயார் செய்யப்பட்டிருந்தது. மிகவும் கடினமானதாக அது இருக்கும். அது அதிக ஒலி எழுப்பும் டக் டக் டக் என்று.
அவர் கடைக்குப் போகும் வேளையிலே மக்கள் நாங்கள், எங்கள் கடிகாரத்தை சரி பார்த்துக் கொள்வோம் என்பார்கள். இப்போது, தாமோதர்பாய் கிளம்பிட்டாரு என்பார்கள். அந்த அளவுக்கு அவர் வாழ்க்கையில் ஒழுங்குமுறை இருந்தது. கடுமையான உழைப்பாளி அவர் இரவு வெகுநேரம்வரை பணியாற்றுவார். அதே போல எங்கள் தாயாரும் கூட வீட்டு நிலையை, கருத்தில் கொண்டு கடினமாக உழைப்பார். ஆனால் இதையெல்லாம் தாண்டியும் கூட, நாங்கள் எப்போதுமே, பற்றாக்குறையான வாழ்க்கை, இருந்தாலும் அது எங்கள் மனதை பாதிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. எனக்கு நினைவு இருக்கிறது.
நான் பள்ளியில் காலணியேதும் அணிந்ததே கிடையாது. ஒருநாள் நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது வழியில் என் மாமாவை வழியில் சந்திக்க நேர்ந்தது. என்ன இப்படியா பள்ளிக்குச் செல்கிறாய் என்று என்னைக் கேட்டார். காலணி இல்லையா என்றார். அவர் உடனே எனக்கு ஒரு கான்வாஸ் காலணியை வாங்கி, எனக்கு அணிவித்தார். அப்போது அதன் விலை 10-15 ரூபாய் இருக்கும், அந்தக் காலணி. அது ஒரு, கான்வாஸால் ஆன காலணி கறைபடிந்து விடும். வெள்ளை கான்வாஸ் காலணி அது. நான் என்ன செய்வேன் என்றால், பள்ளியிலே, மாலையில் பள்ளி விட்டபிறகு, நான் கொஞ்ச நேரம் பள்ளியில் தங்குவேன்.
டீச்சர் சாக்கட்டியைப் பயன்படுத்தி, அதன் மிச்ச துண்டுகள் எறிந்திருப்பாரே, 3-4 அறைகளுக்குச் சென்று சேகரிப்பேன். அந்தச் சாக்கட்டிகளை வீட்டுக்குக் கொண்டு வருவேன். அதை நீரில் நனைத்துக் கொண்டு, பாலிஷ் செய்து, அதை என் கான்வாஸ் காலணிகளில் பூசி, பளபளவென்று ஆக்கி அணிந்து செல்வேன். அது எனக்கு பெரிய சொத்து ரொம்ப பெரிய சந்தோஷமாக இருக்கும். அது ஏனென்றே தெரியவில்லை என் தாயார் என் சிறுவயதிலிருந்தே தூய்மை விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பார். அதன் தாக்கம் எங்கள் மீதும் ஏற்பட்டது. ஆடைகளை சீராக அணிவது என்ற பழக்கம் அது சிறுவயது காலத்திலேயே கூட இருந்தது. என்ன இருக்கிறதோ அதை சீராக அணிய வேண்டும்.
என்னுடைய ….. துணிகளை அயர்ன் செய்ய இஸ்திரி போட எங்களிடம் போதுமான வசதிகள் இருக்கவில்லை. அதற்கு நான் தாமிரபாத்திரத்தில் நீரை ஊற்றி அதைச் சுட வைத்து, அதை இடுக்கியால் பிடித்துக் கொண்டு நானே, என் துணிக்கு இஸ்திரி போடுவேன். பள்ளிக்குச் சென்று விடுவேன். வாழ்க்கையை ஆனந்தமாக சந்தோஷமாக கழித்தோம் இது ஒன்றும், நாம் ஏழைகள் அவர்கள் பணக்காரர்கள் என்று எல்லாம் எந்த சிந்தனையும் கிடையாது, இது தான் வாழும் பண்பாக இருந்தது. எது இருக்கிறதோ அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்வது பணியாற்றிக் கொண்டே இருப்பது. இல்லை என்று எதற்கும் வருந்தக்கூடாது.
என் வாழ்க்கையின் இந்த அனைத்து விஷயங்களும் கூட, அது அதிர்ஷ்டமாக இருக்கட்டும் துர்பாக்கியமாக இருக்கட்டும், அரசியலில் சூழல் காரணமாக இதெல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்னர் நான், முதல்வர் ஆன வேளையிலே, டிவிக்காரர்கள் என் கிராமத்திற்குச் சென்று விட்டார்கள், என் நண்பர்களிடம் வினவினார்கள், என் வீட்டைப் படம்பிடித்தார்கள். அப்போது தான் தெரிய வந்தது… நான் எங்கிருந்து வருகிறேன் என்று. அதற்கு முன்பாக யாருக்கும் என்னைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.
என் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கிறது. என் தாயாரைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். சேவையுணர்வு அவருடைய இயல்பிலேயே இருந்தது. அவருக்குப் பாரம்பரியமாக…. சில விஷயங்கள் இயல்பாகவே வரும். மருந்துகள். குழந்தைகளுக்கு அவரே வைத்தியம் பார்ப்பார். காலையிலே சூரியன் உதிக்கும் முன்பாகவே குழந்தைகளுக்கு வைத்தியம் பார்ப்பார். ஆகையால் காலையிலேயே மக்கள் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவார்கள் அவை அழும் ஆகையால் நாங்களும் சீக்கிரமாகவே எழுந்திருக்க வேண்டியிருந்தது.
தாயார் தொடர்ந்து வைத்தியம் பார்த்து வருவார் இந்த சேவையுணர்வு இருக்கிறதே, அது இந்தக் காரணத்தாலே தான் வளர்ந்து மலர்ந்திருக்கிறது. சமூகத்தின்பால் புரிந்துணர்வு மக்களுக்கு நல்லது செய்தல். இத்தகைய குடும்பம் காரணமாக, உள்ளபடியே பார்த்தால், தாயாரின் தந்தையாரின், என் ஆசிரியர்களின் யாரோடெல்லாம் எனக்கு அறிமுகம் ஆனதோ எல்லோராலும், என் வாழ்க்கை உருவானது.
வினா – இதைக் கேட்கும் பல இளைஞர்கள் உங்கள் வாழ்க்கையால் உத்வேகம் அடைந்திருக்கின்றார்கள். எளிய தொடக்கத்திலிருந்து இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக ஆகியிருக்கிறீர்கள். உலகில் தத்தளித்துக் கொண்டிருக்கும், வழிதேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் ? அவர்களுக்கு உங்களுடைய ஆலோசனை என்ன?
மோதிஜி – நான் அனைத்து இளைஞர்களுக்கும் கூற விரும்புவதெல்லாம், வாழ்க்கையிலே, இரவு எத்தனை தான் இருள் நிறைந்ததாக இருக்கட்டும், அது இரவு மட்டும் தான். பொழுது புலர்வது உறுதி. அந்த வகையிலே, நம்மிடம் பொறுமை வேண்டும் தன்னம்பிக்கை வேண்டும். சரி இது தான் நிலைமை. சூழ்நிலையால் நான் இல்லை.
இறைவன் என்னை ஏதோ காரணத்திற்காக அனுப்பியிருக்கிறார் என்ற உணர்வு வேண்டும். நான் ஒன்றும் தனியாள் அல்ல. யார் என்னை அனுப்பியிருக்கிறாரோ அவர் என்னுடன் கூடவே இருக்கிறார். இந்த அசையா நம்பிக்கை வேண்டும். சிரமங்கள் எல்லாம் சோதிக்க மட்டுமே ஏற்பட்டிருக்கின்றன. சிரமங்கள் என்னை தோல்வியடைய ஏற்படவில்லை. கஷ்டங்கள் என்னை உறுதிப்படுத்தவே அமைந்திருக்கின்றன. கஷ்டங்கள், எனக்கு, ஏமாற்றம் அடைய ஏற்படவில்லை.
நான் அனைத்துக் கஷ்டங்கள் சங்கடங்களை, எப்போதும் சந்தர்ப்பங்களாக மாற்றுகிறேன். இதையே இளைஞர்களுக்கு நான் கூறுவேன். இரண்டாவதாக பொறுமை தேவை…. குறுக்குவழி உதவாது. எங்கள் நாட்டில் ரயில் நிலையங்களில், எழுதப்பட்டிருக்கும். பாலம் வழியாக கடப்பதற்கு பதிலாக சிலர் தடங்களில் இறங்கி சிலர் குறுக்கே கடப்பார்கள்.
ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருக்கும். ஷார்ட்கட் வில் கட்யூ ஷார்ட். நான் இளைஞர்களிடமும் இதையே கூற விரும்புகிறேன் ஷார்ட்கட் வில் கட்யூ ஷார்ட்… குறுக்குவழி உதவாது. பொறுமை தேவை நிதானம் வேண்டும். மேலும் நமக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் கூட, அதை உயிர்ப்பால் நிரப்ப வேண்டும். அதைத் துடிப்போடு வாழ்ந்து பார்க்க வேண்டும். அதில் சந்தோஷம் அடைய வேண்டும்.
என் கருத்து என்னவென்றால் இது மனிதனின் வாழ்க்கையில், சிறப்பை அளிக்கும். ஒருவரிடத்திலே நிறைய இருக்கிறது. வளம் நிறைந்திருக்கிறது கவலையே இல்லை. அவரும் கூட, போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கினார் என்றால் அவரும் நஷ்டப்பட்டுப் போவார். இதெல்லாம் என்னிடம் இருக்கலாம் இருந்தாலும் கூட, நான் என் திறமையால் பெருக்குவேன், என்று முடிவெடுக்க வேண்டும். என்னுடைய திறமையால் சமூகத்துக்கு, நிறைய பங்களிப்பு அளிக்க வேண்டும். நான் நல்ல நிலையில் இருந்தாலும் கூட செய்ய நிறைய இருக்கிறது. நான் மோசமான நிலையில் இருந்தாலும் கூட செய்ய நிறைய பணி இருக்கிறது.
இதையே, விரும்புகிறேன் அடுத்ததாக நான் பார்க்கிறேன் சிலர், போதும்பா இத்தனை கற்றுக் கொண்டே இதோடு போதும் என்பார்கள். வாழ்க்கையிலே, உள்ளே இருக்கும் மாணவனை என்றுமே மரணிக்க விடக்கூடாது. தொடர்ச்சியாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அனைத்தையும் கற்றுக் கொண்டே, முடிந்தமட்டில், இருக்க வேண்டும்.
ஒருவேளை ஏதோவொரு, காரியத்திற்காக வாழ்ந்தே ஆக வேண்டும் என்றால், என்னுடைய மொழி குஜராத்தி மொழி, குஜராத்தி என் தாய்மொழி. மேலும், நான், ஹிந்தி மொழியை, அறிந்திருக்கவில்லை. வாக்குசாதுர்யம் என்றால் என்ன? எப்படி உரையாட வேண்டும்? தந்தையாரோடு தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த போது. மிகச் சிறிய வயதிலே ஏராளமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது ஒவ்வொரு முறையும் ஏதாவது கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் நடைமுறை பேசும் வழிமுறை, இவற்றிலிருந்து நான் கற்று வந்தேன். ஆம், இந்த விஷயங்கள், இந்த நிலையில் நாம் இன்று இல்லையென்றாலும் அப்படி இருந்தால், ஏன் இப்படி செய்யக் கூடாது? இப்படி ஏன் நடக்க கூடாது? இந்தக் கற்கும் இயல்பு இருக்கிறதே, எப்போதும் இருக்க வேண்டும். மேலும், நான் பார்த்த இன்னொரு விஷயம் பெரும்பாலான பேர்களிடம், ஆவது அடைவது தொடர்பான ஒரு கனவை வைத்திருப்பார்கள். இலக்கு வைத்திருப்பார்கள்.
அது இல்லாது போனால், ஏமாற்றமே அவர்களுக்கு மிஞ்சும். ஆகையால் எப்போதும் என் நண்பர்களிடம், உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கும் போதெல்லாம் கூறுவேன், ஆவது அடைவது என்ற கனவைக் காண்பதற்கு பதிலாக, ஒன்றைச் செய்யும் கனவைக் காணுங்கள் என்பேன். ஒன்றைச் செய்யும் கனவைக் காணும் போது, உதாரணமாக பத்தை எட்டத் தீர்மானித்து எட்டை எட்டினால், ஏமாற்றம் அடைய மாட்டீர்கள். நீங்கள் பத்தை எட்ட முயல்வீர்கள்.
ஆனால் நீங்கள் ஆவது தொடர்பாக கனவு கண்டால், அப்படி ஆகவில்லையென்றால், நீங்கள் அடைந்ததைக் கூட நீங்கள் சுமையாக உணர்வீர்கள். ஆகையால் வாழ்க்கையிலே இந்த முயற்சியை மேற்கொள்ள முயல வேண்டும். அடுத்தபடியாக, எது கிடைத்தது எது கிடைக்கவில்லை, என்பதற்கு பதில் என்ன கொடுப்பேன் என்ற உணர்வு வேண்டும். மகிழ்ச்சி இருக்கிறதில்லையா, அது, நீங்கள் எதை அளித்தீர்கள் என்ற கர்ப்பத்திலிருந்து பிறக்கிறது.