
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது.
அதன் ஏழாவது பகுதி…
வினா – நீங்களும் ஷி ஷிங் பிங்கும் ஒருவரை ஒருவர் நண்பர்கள் என்று கூறிக் கொள்கிறீர்கள். எப்படி இந்த நட்பு அண்மையில் ஏற்பட்ட அழுத்தங்களைக் குறைக்கவும், உறவுகளை பலப்படுத்தவும், சீனாவுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடக்கவும் உதவிகரமாக இருக்கும்.
மோதிஜி – அதாவது, பாரதம் மற்றும், சீனாவுக்கிடையே தொடர்பு, இது ஒன்றும்… இன்றுநேற்றல்ல. இரண்டுமே பழமையான… கலாச்சாரங்கள். பழமையான, நாகரீகங்கள். மேலும்… நவீன உலகிலும் கூட, இரண்டின் பங்குபணி இருக்கிறது. நீங்கள் பழைய பதிவுகளைப் பார்த்தீர்களானால், பல நூற்றாண்டுகளாக, இரண்டும் ஒன்றிடமிருந்து மற்றது கற்று வந்திருக்கின்றன. இரண்டும் இணைந்து, உலகத்தின் நன்மைக்காக…. பங்களிப்பு அளித்து வந்திருக்கின்றன உலகின் ……பழைய பதிவுகளைப் பார்த்தால் புரியும், உலகத்தின் ஜிடிபியிலே, அதன் 50 சதவீதம் இந்த இரு நாடுகளுடையதாக இருந்தது.
இத்தனை பெரிய பங்களிப்பு…. பாரதத்தினுடையதாக இருந்தது. மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன. மேலும் முந்தைய நூற்றாண்டுகளில் இருவருக்குமிடையே பிணக்குக்கான எந்த சான்றுகளும் இல்லை. எப்போதுமே, ஒன்றிடமிருந்து மற்றது கற்பது ஒன்றையொன்று அறிவது என்பதாகவே இருந்தது. மேலும் புத்தரின் தாக்கம் ஒரு காலத்தில் சீனாவில் நிறைய இருந்தது.
இங்கிருந்து தான் அந்தச் சிந்தனை…. சென்றது. நாம், எதிர்காலத்திலும் கூட, இந்தத் தொடர்புகளை பலப்படுத்தி வர வேண்டும் தொடர வேண்டும். இந்த… மாதிரியான…. அண்டை நாடுகள் என்றால் ஏதோ வகையில் கருத்து வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும். எப்போதாவது, கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்று எப்போதும் கிடையாது குடும்பத்திலும் இருப்பது தானே!! ஆனால் எங்களுடைய முயற்சி வேறுபாடுகள் என்னென்ன இருக்கிறதோ, அவை பிணக்குகளாக ஆகக் கூடாது.
இந்த நோக்கில் எங்கள் முயற்சி இருக்கிறது. இந்த வகையிலே தான், நாங்கள்.. மோதல்கள் அல்ல, பேச்சுவார்த்தை, இதைத் தொடர, அழுத்தமளிக்கிறோம். அந்த நிலையில் தான் …… ஒரு சீரான, கூட்டுறவான… உறவு, மேலும்… இரு நாடுகளினுடைய, சிறந்த நலன்களுக்காக இருக்கும். இது உண்மை தான்… எங்களுடைய, எல்லை விவாதம் தொடர்ந்து நடக்கிறது. 2020இலே எல்லையிலே நடந்த சம்பவங்கள், இதன் காரணமாக, எங்களுக்கிடையே, கணிசமான பிளவு ஏற்பட்டது. ஆனால் இப்போது குடியரசுத் தலைவர் ஷியை நான் சந்திக்க நேர்ந்தது.
அதன் பிறகு எல்லையிலே இருந்த, அழுத்தங்கள் இளக்கப்பட்டிருக்கின்றன 2020க்கு முந்தைய நிலையை எட்ட பணியாற்றி வருகிறோம். இப்போது மெல்லமெல்ல…. அந்த நம்பிக்கையும் அந்த, உற்சாகமும் அந்த ஆர்வமும் மீட்டெடுக்கப்படும். இதற்கு சற்று காலம் ஆகும் இடையே 5 ஆண்டுகள் இடைவெளி ஆகிவிட்டது.
நாங்கள் ஒற்றுமையாக இருப்பது ஆதாயமானது மட்டுமல்ல அதோடு, உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் வளத்துக்கும் அவசியமானதும் கூட. 21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு எனும் போது, நாங்கள் விரும்புவது பாரதம் சீனத்திற்கு இடையே, உரசல்கள் எல்லாம் இயல்பானது தான். உரசல்கள் மோசமானவை அல்ல. அவை மோதல்களாக மாறக் கூடாது.
வினா – உலகம் உருவாகிவரும் உலகளாவிய போர் பற்றிய கவலையில் இருக்கிறது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட அழுத்தம். உக்ரைனில் ரஷியவில் ஐரோப்பாவில். இஸ்ரேலில். மத்திய கிழக்கில். 21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய யுத்தத்தை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி, போர் அதிகரிப்பு பற்றியும் மோதல் தவிர்ப்பு பற்றியும் உங்கள் கருத்து என்ன?
மோதிஜி – அதாவது கோவிட் பெருந்தொற்று, நம்மனைவரின் எல்லைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்ட து. நாம் எத்தனை தான் நம்மை, பலமான தேசம் என்று நினைத்துக் கொண்டாலும், வளர்ச்சி அடைந்தவர்களாக நினைத்துக் கொண்டாலும், விஞ்ஞான வளர்ச்சி அடைந்தவர்களாக கருதினாலும் எதுவாக இருந்தாலும் அவரவர் நினைப்புக்கேற்ப. ஆனால் கோவிட் காலத்தில் நாமனைவரும் தரையிறக்கப்பட்டோம்.
உலகின் அனைத்து தேசங்களும். அப்போது உலகம் இதிலிருந்து கற்கும் என்று தோன்றியது. நாம் ஒரு புதிய உலக வரிசை நோக்கிச் செல்வோம் என்று நினைத்தோம். அதாவது, 2ஆம் உலகப்போருக்குப் பிறகு ஒரு உலக வரிசை உருவானது. அப்படி கோவிடுக்குப் பிறகு ஏற்படும் என்று நினைத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நிலைமை என்னவானதென்றால், அதாவது, அமைதியை நோக்கிச் செல்வதற்கு பதிலாக, உலகம் பிளவுபட்டது, நிச்சமற்ற ஒரு நிலைமை உருவானது, போர்கள் அதை மேலும் சிக்கலாக்கியது.
என்ன நினைக்கிறேன் என்றால் நவீன யுத்தங்கள், வெறும் ஆதாரங்கள், அல்லது நாட்டங்களுக்காக மட்டுமல்ல. இன்று நான் பார்க்கும் போது, இத்தனை, பல வகையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. புறப்போர்கள் பற்றி விவாதிக்கப்பட்டாலும் அனைத்துத் துறைகளிலும் மோதல்கள் நடந்து வருகின்றன. சர்வதேச அமைப்பு தோன்றியது இது கிட்டத்தட்ட பொருத்தமற்றதாக ஆகி விட்டது சீர்திருத்தம் நடைபெறவில்லை. ஐ.நா. போன்ற அமைப்புகள் தங்கள் பங்களிப்பை, ஆற்ற முடியவில்லை.
உலகத்திலே யாரெல்லாம், சட்டத்தை, விதிகளைப் பொருட்படுத்தாமல் அனைத்தையும் செய்கிறார்கள் யாராலும் தடுக்க முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையிலே, புத்திசாலித்தனம் என்னவென்றால் அனைவரும், மோதல்கள் பாதையை விடுத்து சமரஸப் பாதையை கைக்கொள்ள வேண்டும். மேலும், வளர்ச்சிப் பாதையே சரியானது விஸ்தரிப்புப் பாதை தவறானது.
நான் முன்னரே கூறியது போல, உலக நாடுகள் ஒன்றையொன்று சாந்துள்ளது தொடர்புடையது. அனைவருக்கும் பரஸ்பரத் தேவை இருக்கிறது. தனியாக எதையும் சாதிக்க முடியாது. நான் கவனித்த வரையில் எத்தனை, பலவகை மேடைகளுக்கு நான் செல்ல வேண்டியிருந்தாலும், அதிலே அனைவரையும் கவலை அரித்தெடுக்கிறது…. மோதல் பற்றி. அதிலிருந்து விரைவாக விடுதலை கிடைக்க வேண்டும் என்று நம்புகிறோம்.