செண்டிமெண்ட் விஷயம் ஆன ‘ஆபரேஷன் சிந்தூர்’; சொன்னபடி செய்த மோடிக்கு பாராட்டு!

operation sinthoor by india - 2026

பொருத்தமான அஞ்சலி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியின் மனைவி இந்திய இராணுவ பதிலடியை தனது மறைந்த கணவருக்கு ஒரு பொருத்தமான அஞ்சலி என்று பாராட்டியுள்ளார். என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது, மேலும் அவர் (பாகிஸ்தானுக்கு) பதிலளித்த விதம், எங்கள் நம்பிக்கையை அவர் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இதுவே என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும், இன்று அவர் நிம்மதியாக இருப்பார்,” என்று செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறினார்

இந்திய ராணுவத்தின் துல்லியமான பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினர், நீதிக்கான வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆயுதப் படைகளுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான சுபம் திவேதி, தனது மனைவி மற்றும் மைத்துனியுடன் பஹல்காமிற்குச் சென்றிருந்தபோது, ​​ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணிகளான சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர் தலையில் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்நிலையில் இன்று பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அளிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து அவரது மனைவி அஷான்யா திவேதி பேசினார். “இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைவருக்கும், குறிப்பாக ஆயுதப் படைகளில் உள்ள எங்கள் பணியாளர்களுக்கும், குறிப்பாக நடவடிக்கையை தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

“‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர், கணவர்களை இழந்த எங்களுடன் அவர்கள் நிற்பதை தெளிவாகக் காட்டுகிறது. பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அது ஒழிக்கப்படும் என பிரதமர் என்ன சொன்னாரோ, அதை அவர் நிரூபித்தார். ” என்றார்.

மேலும்,, “பயங்கரவாதிகள் எங்களை பாதிக்கப் படக் கூடியவர்களாக மாற்றுவதற்காக எங்கள் கணவர்களைக் கொன்றனர், ஆனால் நாங்கள் போராடுவோம். பிரதமர் மோடி அவர் சொன்னது போல் பழிவாங்கினார், இந்த பயங்கரவாதிகள் முடிவுக்கு வருவார்கள்” என்று கூறினார்.

ஷுபாமின் சகோதரரும் இந்த விரைவான நடவடிக்கையை வரவேற்றார். “நாடு முழுமையும் மோடி ஜிக்கும் நமது ஆயுதப் படைகளுக்கும் நன்றி தெரிவிக்கிறது. யாராவது இந்த வழியில் நம் நாட்டை சவால் செய்தால், நாம் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும். இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் நமது காயங்களுக்கு மருந்தாக இருந்தது,” என்று அவர் கூறினார். 

“அந்தத் தாக்குதலின் போது உயிர் இழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் உண்மையிலேயே அஞ்சலி செலுத்துகிறது.” என்றார்.

ஷுபாமின் தந்தையும் அரசாங்கத்தின் உறுதியைப் பாராட்டினார். “அதிகாலை 2 மணியளவில் எனக்கு தகவல் கிடைத்தது. இந்திய அரசாங்கமும் ஆயுதப்படைகளும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன. நாட்டுக்காகவும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதற்காகவும் பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி பயங்கரவாதத்தை அழித்துவிட்டார். நான் அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன்.”

புதன்கிழமை அதிகாலை தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள ஒன்பது உயர் மட்ட பயங்கரவாத உள்கட்டமைப்புத் தளங்களை குறிவைத்தது. இந்திய ராணுவம் தாக்குதல்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற துல்லியத்துடன் நடத்தப்பட்டதாகவும், பாகிஸ்தானில் உள்ள எந்த பொதுமக்கள் அல்லது இராணுவ நிலைகளையும் பாதிக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தியது.

operation sithoor 2 - 2026

பகல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கேரளாவின் ராமச்சந்திரனின் மகள் ஆரத்தி, பயங்கரவாத முகாம்களை அழித்ததற்காக இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தார். தனது தாயின் சிந்தூரைக் (குங்குமத்தைக்) கைப்பற்றியதற்கு பழிவாங்கும் விதமாக, இந்த நடவடிக்கைக்கு #OperationSindoor என்ற சரியான பெயரை வழங்கியதற்காக படைகளைப் பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories