
ஆதாரை இணைத்தால் மட்டுமே இனி தத்கால் டிக்கெட் எடுக்க முடியும் என்று, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே பயனர்கள் இனி, ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும்.
ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர் மட்டுமே தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளதால், பயனர்களுக்கு விரைவில் டிக்கெட் உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே தத்கால் டிக்கெட் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துளது ரயில்வே அமைச்சகம். இதன்படி, ஆதார் எண் டிக்கெட் பதிவுகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 01 ஜூலை 2025 முதல் அமலுக்கு வருகிறது.
இந்திய ரயில்வே தத்கால் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கீழ்க்காணும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூலை 1 முதல், IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தத்கால் பயணச்சீட்டு முன்பதிவு ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டும் முன்பதிவு செய்யலாம். 2025 ஜூலை 15 முதல், ஆதாருடன் OTP அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாகும்.
ஐ.ஆர்.சி.டி.சி.யும், பயண முகவர்களும் OTP அடிப்படையில்தான் டிக்கெட் வெளியிட முடியும்! அதிகாரபூர்வ PRS கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படும் OTPயை உறுதிப்படுத்திய பின்பே தத்கால் பயணச்சீட்டு முன்பதிவு வழங்க முடியும். இது 2025 ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.
முதற் 30 நிமிடங்கள் முகவர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாது! அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தத்கால் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
குளிர்சாதன வகைகளுக்கு: காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை
சாதாரண வகைகளுக்கு: காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை
இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது.





