ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் சமீபத்தில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு நான்கு முறை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக்கின் ஜாமீன் மனு இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
கார்த்திக் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவுக்கு கடும் எத்ரிப்பு தெரிவித்த சிபிஐ, அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதாடியது. மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் முக்கிய ஆதாரத்தை கார்த்தி சிதம்பரம் அழித்துவிட்டதாகவும், ஆதலால் ஜாமின் வழங்கக் கூடாது என்றும் அவர் ஜாமீனில் வெளியே வந்தால் இன்னும் பல ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருபப்தாகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம் செய்தது.
ஆனால் வழக்கு ஆதாரங்களை தான் அழித்ததற்கான ஆதாரத்தை சிபிஐ காண்பித்தால், ஜாமின் மனுவை திரும்ப பெற தயார் என கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதாடியுள்ளது. இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் இந்த மனுமீதான தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.