நாட்டை ஆட்டிப் படைக்கும் பலவீனங்கள்; மரபுகளின் பலத்தால் முறியடிப்போம்: யுகாதி வாழ்த்தில் மோடி!

இந்தியா சற்றுமுன்

pm modi - 2026

இன்று விக்ரம வருடம் 2075 பிறப்பதை ஒட்டி நாட்டு மக்கள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி. தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ள மோடி, தெலுங்கு, கன்னட மக்கள் கொண்டாடும் புத்தாண்டான யுகாதி உள்ளிட்ட புது வருடப் பிறப்பை ஒட்டியும் அம்மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடீ பட்வா என மகாராஷ்டிரத்தில் இன்று புத்தாண்டு பிறக்கிறது. இதற்கு மராட்டிய சகோதர சகோதரிகளுக்கு தனது புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள மோடி, கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும் என நம்புவதாகக் கூறியுள்ளார்.

 

மணிப்பூர் மக்கள் கொண்டாடும் சஜிபு செய்ரோபா எனும் புத்தாண்டு வருடப் பிறப்பை முன்னிட்டு, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதியும் வளர்ச்சியும் வரும் ஆண்டில் திகழட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு, கன்னட மக்கள் இன்று யுகாதி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு தில்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

யுகாதி என்றால் புதுயுகத்தின் தொடக்கம் என்று கூறிய மோடி, யுகாதியின் பெருமைகளைப் பட்டியலிட்டார். புண்ணியத் தலமான ஸ்ரீசைலத்துக்கு வருபவர்கள் அனைத்துக் கட்டுகளிலிருந்தும் விடுபட்டு மேன்மை பெறுவார்கள் என வேதவியாச மகரிஷி கூறியுள்ளார் என்றார்.

மேலும், நம் நாட்டை உள்நாட்டு பலவீனங்களில் இருந்து முக்தி அடைய வைக்க நாட்டு மக்கள் விரும்புகின்றனர். சாதி, மதம் மட்டுமின்றி வேறுபல பலவீனங்களும் நாட்டை ஆட்டிப் படைக்கின்றன. நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் சேதப்படுத்த நடத்தப்பட்ட முயற்சிகளை நாம் நமது மரபுகளின் பலத்தால் கடந்து வந்திருக்கிறோம் என்று பேசினார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.