விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் ரத யாத்திரை நாளை தமிழகத்தில் வர உள்ள நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து நெல்லை ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமர் கோவில் கட்டுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக உபியீல் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய ரத யாத்திரை மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக வந்து இறுதியில் ராமேஸ்வரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தின
இந்த ரத யாத்திரை நாளை நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி வழியாக செல்லவிருந்த நிலையில் சற்றுமுன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வரும் 23-ம் தேதி வரை இருக்கும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.