ரயில் நிலையங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. தொடர்ந்து ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த ஹாலஜன் விளக்குகள், மெர்குரி லைட், ஒளிரும் தன்மையுள்ள விளக்குகள் ஆகியவற்றுக்குப் பதிலாகக் குறைந்த அளவு மின்சாரத்தில் அதிக வெளிச்சத்தைப் தரக்கூடிய எல்.இ.டி விளக்குகளைப்பொறுத்த என ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து முதற்கட்டமாக 714 ரயில் நிலையங்கள் முழுமையாக 100 சதவிகிதம் எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டுவிட்டன. மார்ச் 31-ம் தேதி வரையிலும் கால அவசாகம் இருந்தபோதிலும் அதை மார்ச் 15-ம் தேதியே நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது, தென்னக ரயில்வே. மொத்தம் 86,291 மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 79,80,000 யூனிட் மின்சாரம் ஆண்டு முழுவதும் சேமிக்கப்படும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் மிச்சமாகும் நிலை உருவாயிருக்கிறது.
Popular Categories



