பாகிஸ்தானுக்கு நாம் பல முறை உரிய பதிலடியை கொடுத்துள்ளபோதிலும் அந்நாடு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை’ என்றார் ராஜ்நாத் சிங். “பாகிஸ்தானுக்கு நாம் பல முறை உரிய பதிலடியைக் கொடுத்துள்ளோம். ஆனாலும் அந்நாடு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை. எனினும், அமைதியைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஜமாத் உத் தாவா உள்ளிட்ட 10 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் பல்வேறு அமைப்புகளைத் தடை செய்தபோதிலும் அந்த அமைப்புகள் புதிய பெயர்களில் மீண்டும் செயல்படத் தொடங்கின. இவ்வாறு எந்த பயங்கரவாத அமைப்பும் புதிய பெயரில் மீண்டும் வந்து பயங்கரவாதச் செயல்களைத் தொடங்காமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார் ராஜ்நாத் சிங். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இம்மாதம் இந்தியா வருகிறார். அவரது வருகையின்போது ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிடிஐ செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
பதிலடி கொடுத்தும் பாகிஸ்தான் திருந்தவில்லை: ராஜ்நாத் சிங்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari