புதுதில்லி பிரதமர் அலுவலக வெப்சைட்டை போலியாக உருவாக்கி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் என்ற பெயரில் போலியாக ஒரு இணையதளம் செயல்பட்டுவருவதாக தில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இணையதளத்தில், பிரதான் மந்திரி ஆதர்ஷ் யோஜனா என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி, இளைஞர்களிடம் நிதி மோசடி நடந்துள்ளதும் போலீசார் கவனத்துக்கு வந்தது. வேலை தேடும் இளைஞர்களைக் கவருவும் வகையில், வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று இந்த வெப்சைட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை நம்பி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்போரிடம், முன்பணம் கொடுத்தால்தான் அடுத்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி, பணம் பறித்துள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் இவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாந்தது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அந்த போலி இணையதளத்தை போலீசார் முடக்கினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த சுதிப்தா சட்டர்ஜி என்பவர் அந்த இணையதள உருவாக்கத்தின் மூளையாக செயல்பட்டவர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பிரதமர் அலுவலகம் பெயரில் போலி இணையதளம்: பணம் வசூலித்தவர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari