தில்லியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியா

obama_modi_welcome புது தில்லி: பாரதத் தலைநகர் தில்லிக்கு இன்று வருகை தந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு சிறப்பாஅ வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபுகளுக்கு மாறாக விமான நிலையத்துக்கு நேரில் சென்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை கட்டித் தழுவி வரவேற்றார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான பாரதத்தின் 66வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று காலை 9.43 க்கு தனி விமானம் மூலம் தில்லி விமான நிலையம் வந்தார். அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். இவருடன் மனைவி மிக்செல் ஒபாமாவும் வந்தார். தொடர்ந்து அதிபர் ஒபாமாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பகல் 12 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் 12.30க்கு, ராஜ்காட் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், தில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ஒபாமாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அமெரிக்க அதிபர் ஒருவர் பாரத நாட்டின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. வெளிநாட்டின் தேசிய விழா ஒன்றில் கலந்து கொள்வது ஒபாமாவுக்கும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது. [wp_ad_camp_4] modi [su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”5″ orderby=”comment_count”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.