
புதுதில்லி: கடந்த மாதம் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளாதாரம் மற்றும் 10ஆம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தததாகவும், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்தது.
வாட்ஸ்ஆப் மூலம் 10ஆம் வகுப்பு கணிதம், மற்றும் 12ஆம் வகுப்பு பொருளாதார பொதுத்தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததால் அந்த இரண்டு தேர்வுகளையும் மறுபடியும் நடத்த CBSE முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அந்த வகையில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொருளாதார தேர்விற்கான மறுதேர்வு நடத்தப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது மாணவர்கள் நலனை கருத்தில் மறு தேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாடா…என்று பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் மாணவர்களும் பெற்றோர்களும்!
இதனை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் மத்திய மனித வளத் துறை அமைச்சக செயலர் அணில் ஸ்வரூப்:
Consequent to the preliminary evaluation of the impact of reportedly leaked CBSE class 10 maths paper & keeping in mind the paramount interest of students, CBSE has decided not to conduct re-examination even in the states of Delhi NCR and Haryana. Hence, no re-exam for class 10
— Anil Swarup (@swarup58) April 3, 2018



