December 5, 2025, 5:45 PM
27.9 C
Chennai

நியூடிரியோனா திட்டம் என்றால் என்ன? அறிவியல் ஆராய்ச்சியாளர் மாரிமுத்து கனி அவர்களின் பதிவு

neutrino - 2025

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நியூட்ரினோ என்ற சொல் டிரெண்டில் உள்ளது. நியூட்ரியோனா திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தால் என்ன நன்மை? என்ன தீமை? என்பது தெரியாமலேயே யாராலோ தூண்டிவிடப்பட்டு பலர் போராடுகின்றனர். இந்த திட்டத்தை எதிர்த்து நடைப்பயணம் நடத்தி வருபவர்களுக்கு கூட இந்த திட்டம் குறித்து முழுமையாக தெரியுமா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அறிவியல் ஆராய்ச்சியாளர் மாரிமுத்து கனி நியூட்ரியோனா குறித்து எளிய தமிழில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பதிவுதான் இது: இதை கொஞ்சம் பொறுமையாக படித்துவிட்டு பின்னர் நியூட்ரினோ திட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்று போராடுங்கள். இதோ அவரது கட்டுரை:

நியூட்ரினோ திட்டம் பற்றி மக்கள் இவ்வளவு பயப்படுகிறார்களே.! நியூட்ரினோ என்றால் என்ன?

அணு சக்தியா?
அணு உலையா?
சூழலைக் கெடுப்பதா?
அணு ஆராய்ச்சியா?
கதிர்வீச்சை ஏற்படுத்துமா?
அணுக்கழிவுகளை கொட்டி வைப்பதா

அணு என்றால் என்ன?

பிளக்க முடியாதது, ஒரு பொருளை பிரித்துக் கொண்டே போனால் பிரிக்க முடியாத ஒருநிலை வரும் இல்லையா அதுதான் அணு என்பது கிரேக்கர்களின் நம்பிக்கை.

கிரேக்க தத்துவஞானி டெமாக்ரிடஸ் என்பவரே முதன் முதலில் கிமு 400ல் அணுவைப் பற்றிக் குறிப்பிட்டவர்.

அணுவை பற்றி இந்தியர்கள் ” கணாத ரிஷி [kaNAdha rishi – कणाद मुनि] கிமு 600ல் ” அதாவது டெமாக்ரிடஸ் சொல்வதற்கு முன்பாக ‘அணு’ மற்றும் “பரமாணு” பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இவரும் அணுவைப் பிளக்க முடியாதது என்றே குறிப்பிட்டு உள்ளார் பல ஆண்டுகள் அணுவை பிரிக்க முடியாது என்றே நம்பி வந்தனர்.

ஜான் டால்டன், J.J. தாம்சன், ரூதர்ஃ போர்டு போன்றோரின் உழைப்பினால் அணுவை பிளக்க முடியும் என்றனர்.

அதன் உள்ள இருப்பது புரோட்டான் மற்றும் நியூட்ரான் எனவும் இதற்கு பெயரே உட்கரு எனவும் இதைச் சுற்றி வருவதே எலக்ட்ரான் (எதிர்மின் துகள்).

பிரிக்க முடிந்த பிறகும் இதற்குப் பெயர் அணு தான்.

அணுவின் உள்ளே இருக்கும் நடுநிலை நியூட்ரானும் நேர்மின் புரோட்டானும் சும்மா இருந்தால் பிரச்சினை இல்லை.

ஓயாது சண்டையிட்டுக் கொண்டே இருக்கும். இந்தச் சண்டையில் நியூட்ரான் புரோட்டானாகவும் புரோட்டான் நியூட்ரானாகவும் மாறும். ஆம், இந்தச் சண்டையில் புதிதாக பிறப்பது தான் “நியூட்ரினோ”

இந்தச் சண்டைக்குப் பெயர்தான் பீட்டா சிதைவு (PETA அல்ல , Beta )

ஆளின் உருவத்திற்கேற்ப சாப்பிடனும் சண்டை போடனும் திறமையை வெளிப் படுத்தனும். ஆனால் புரோட்டானும் நியூட்ரானும் சண்டை போட்டு குறைவான ஆற்றல் வெளியானது. என்ன நடந்து இருக்கும் என்று 1930ல் பௌலி என்பவர் சொல்கிறார்.

“Dear radioactive ladies and gentlemen” என்ற கட்டுரையில் புரியாத ஒரு துகள் இருப்பதாக பௌலி சொல்கிறார்.

1933ல் என்ரிகோ பெர்மி என்பவர் அந்த புரியாத துகளுக்கு “நியூட்ரினோ” என்று பேர் சூட்டுகிறார்.

1956 வரைலும் “இருக்கு ஆனா இல்லைன்ற மாதிரி” experimental மூலம் நிரூபிக்க முடியலை.

சரி, ஏன் நிரூபிக்க முடியலை?
நியூட்ரினோ நிறையற்றது (negligible mass), மின் சுமையற்றது (no charge)

இது இரண்டுமே இல்லாத ஒரு துகளை கண்டுபிடிப்பதே கடினம்.

இந்த நியூட்ரினோ தண்ணிக்குள்ள எவ்ளோ தூரம் சராசரியாக போகும்னா பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தில் 10 மடங்கு

முதன் முறையாக 1956ல் ரீன்ஸ், கோவன் இருவரும் சவான்னா நதிக்கரை ஆய்வுக் கூடத்தில் நியூட்ரினோவை அடையாளம் காண்கிறார்கள். இந்த நியூட்ரினோ எதிலிருந்து வந்தது தெரியுமா?

அணு உலையிலிருந்து!

உண்மையில் இவங்க கண்டு பிடிச்சது நியூட்ரினோ அல்ல, எதிர் நியூட்ரினோ

புரோட்டான் நியூட்ரானாக மாறும் போது நியூட்ரினோ, நியூட்ரான் புரோட்டானாக மாறும் போது எதிர் நியூட்ரினோ.

ஒன்று கடிகாரச் சுற்றுத் திசை மற்றொன்று எதிர்க் கடிகாரச் சுற்றுத் திசையில் சுற்றும் (spin value)

இதை கண்டறிய எங்கெல்லாம் ஆய்வுக் கூடம் இருக்கு?

1996லேயே ஜப்பானின் காமியோகடே நியூட்ரினோ மையத்தில் சூப்பர்நோவா1987A என்ற பெருவெடிப்பு நிகழ்விலிருந்து நியூட்ரினோவை கண்டுபிடிச்சாங்க.

கனடாவின் Sudbury neutrino observatory 1999 லிருந்து செயல்படுது. இது ஒரு நிக்கல் சுரங்கத்தின் அடியில் அமைக்கப் பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளிலும் நியூட்ரினோ ஆய்வு மையங்கள் உண்டு.

எல்லா ஆய்வு மையங்களுமே கடினமான பாறைக் கடியில் அமைக்கப் பட்டுள்ளது. ஏன்?

நமது சுட்டுவிரல் நுனியில்கூட 50 இலட்சம் நியூட்ரினோ துகள்கள் ஒவ்வொரு நொடியிலும் ஊடுருவிச் செல்கின்றன.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களின் உடலிலும் ஊடுருவிச் செல்லும் நியூட்ரினோக்களை எண்ணிப் பாருங்கள். தலையைச் சுற்றுகிறதா?

இவ்வளவு துகள்கள் ஊடுருவியும் நமக்கு எதுவும் ஆகலையே ஏன்?

இவை நேரடியாக எந்த வொன்றோடும் வினை புரியாது. கடந்து போய்க் கொண்டே இருக்கும் (Weak interaction only).

கடினமான பாறைகளுக்கடியில் இந்த ஆய்வு மையங்களை அமைப்பதால் பிற விண் வெளி கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும்.

முகவரியே இல்லாத 100 கோடிப் பேரில் ஒரு குறிப்பிட்ட நபரின் முகவரியை எப்படித் தேடுவது?

பாறைகளுக்கடியில் சுமார் 1.5- 2கிமீ ஆழத்தில் இந்த ஆய்வு மையம் அமைக்கப்படும்.

நியூட்ரினோ துகள்களை உருவாக்க முடியுமா?

முடியும், சூரியனில் நியூட்ரான் புரோட்டான் சண்டையில் உருவாவதே நியூட்ரினோ. இதைத் தான் இங்கே ஆய்வு செய்யப் போகிறார்கள். புரோட்டானை மின் காந்தப் புலங்களுக்கிடையே குதிரைக்கு முகத்திரை போட்டது போல் ஒரு குறிப்பிட்ட வழியில் ஓட விடுவார்கள்

ஓடுவதென்றால் சாதாரண வேகமல்ல. மின்னல் வேகத்தில் புரோட்டான் செல்லும் போது திடீரென அதன் வழியில் ஒரு நியூட்ரானை வைத்து மோதச் செய்வதால் நியூட்ரினோ வெளி வரும், கூடவே எலக்ட்ரானும் வெளியே வரும்.

புரோட்டானை ஓடவிடும் மிகப்பெரிய கருவிதான் “synchrotron” . இது சுமார் 2கிமீ சுற்றளவில் மிகப் பெரிய மின் காந்தங்கள் கொண்டு அமைக்கப்படும்.

இதன் முடிவை Cerenkov detector மூலமாக ஆய்வு செய்து நியூட்ரினோவின் பாதை அதன் வேகம் தாக்கும் திறனை கணக்கிடுவார்கள்.

அண்டவெளி முழுவதும் நிறைந்துள்ள நியூட்ரினோவை ஆய்வு செய்வதன் மூலம் உலகின் தோற்றம் குறித்த பல்வேறு உண்மைகளை அறிய முடியும் என்பது அறிவியலாளர்களின் கருத்து.

சூரியனே ஒரு மிகப் பெரிய நியூட்ரினோ மூலம்தான்.

இந்த தரவில் நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?

1. இது அணு ஆராய்ச்சித் திட்டமல்ல.

2. அணு உலைகளை அமைப்பதல்ல.

3. இது ஆபத்தான கதிர் வீச்சை வெளியிடாது.

4.வெப்பத்தை அதிகரிக்காது, குறைக்காது.சுற்றுச் சூழலை பாதிக்காது.

5. Subatomic particle எனப்படும் அணுவின் பகுதிப் பொருட்களை ஆய்வு செய்வதே இத்திட்டம்.

6. இது அணுக் கழிவுகளை கொட்டு மிடம் அல்ல.

அதெல்லாம் சரி, இந்த ஆய்வு மையத்தை அமைக்க வேறு இடமே கிடையாதா?

கிடையாது. இமய மலையில் கடினமான பாறைகளே கிடையாது. அவை நெகிழும் தன்மை கொண்டவை.

தென்னிந்தியாவில் கடினமான பாறைகள் அதிகம். நீலகிரி தேர்வு செய்யப்பட்டது. ஆனால் சரணாலயங்கள் இருப்பதால் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதிக்க வில்லை.

தற்போது தேனி பொட்டிபுரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இது அணுக் கதிர் வீச்சை ஏற்படுத்தவோ அணுக் கழிவு களைக் கொட்டவோ ஏற்படுத்தப் பட்ட திட்டம் அல்ல..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories