சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் தமிழகத்தில் திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தமிழர் பெயர் தாங்கிய அமைப்புகளும் சினிமா இயக்குனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக., தனது தகவல் தொழில்நுட்ப குழு மூலம், பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், #GoBackModi என்ற ஹாஷ் டாக் போட்டு டிவிட்டரில் பதிவிட்டு டிரெண்ட் ஆக்கினர். இந்நிலையில் சென்னை வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழகத்துக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர உறுதி கூறிய மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், #ThankYouModi என்ற ஹாஷ் டாக் போட்டு வருகின்றனர் மறு முகாமைச் சேர்ந்தவர்கள்.
#ThankYouModi என்ற ஹேஷ்டாக் போட்டு இரவு 7 மணி முதல் 9 மணி வரை டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் பயன்படுத்தி, நிகழ்வுகளைக் கூறி, டிரெண்ட் ஆக்குவோம் என்ற அழைப்புடன் சமூக வலைத்தளங்களில் செய்தி உலா வந்தது.
தமிழகம் மோடியின் பக்கம் என இன்னொரு ஹாஷ் டாக்கும், மோடியை வரவேற்கிறோம் என்ற இன்னொரு ஹாஷ்டாக்கும் இன்று காலை டிவிட்டரில் பரப்பப் பட்டது குறிப்பிடத் தக்கது.
டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இந்த #ThankYouModi ஹாஸ்டேக்கை இன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பயன்படுத்தி டிரென்ட் ஆக்குவோம் என்ற வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
#CauveryIssue #CauveryProtest #CauveryManagementBoard #TNFight4Cauvery