சிரியா மீது விரைவில் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!

உலகம் சற்றுமுன்

Pakistan Could Be Put On Donald Trumps Immigration Ban - 2026

சிரியா மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடை பெற்றுவரும் உள்நாட்டுப் போரில், சிரியாவுக்குப் படையுதவி செய்து வருகிறது ரஷ்யா. அது, சிரியாவை நோக்கி வரும் ஏவுகணைகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் அனைத்தும் தாக்கி அழிக்கப்படும் என கூறியிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இதுவரை சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்படும் என எப்போதும் கூறவில்லை என்றும், விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்போது பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.