சென்னை : எஸ்.சி.,எஸ்.டி., சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என ஸ்டாலின் பேசினார்.
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9ல் சேர்க்க வேண்டும் என்றும் பேசினார் ஸ்டாலின்.
இதனைக் குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக., தேசிய செயலாளர் எச்.ராஜா, ஏற்கனவே சீராய்வு மனு போடப்பட்டுள்ளது. இதுவும் பூனை மேல் மதில் போல.
ஏற்கனவே ஸ்டாலின் மதில் மேல் பூனை என்பதற்கு பதில் பூனை மேல் மதில் என்று கூறியதை தாங்கள் கவனிக்க வில்லையா? அது மட்டுமல்ல பொன்னார் என்பதற்கு பதில் பொன்னர் சங்கர் என்றார். எடப்பாடி க்கு வாழப்பாடி என்றார் இன்னமும் பல. அவர் சொன்னதைக் குறிப்பிட்டேன் – என்று கிண்டல் அடித்துள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவு…
ஏற்கனவே ஸ்டாலின் மதில் மேல் பூனை என்பதற்கு பதில் பூனை மேல் மதில் என்று கூறியதை தாங்கள் கவனிக்க வில்லையா? அது மட்டுமல்ல பொன்னார் என்பதற்கு பதில் பொன்னர் சங்கர் என்றார். எடப்பாடி க்கு வாழப்பாடி என்றார் இன்னமும் பல. அவர் சொன்னதைக் குறிப்பிட்டேன் https://t.co/ACPOPXv1Ta
— H Raja (@HRajaBJP) April 16, 2018