புது தில்லி: மூத்த குடிமக்கள் தங்கள் கட்டண சலுகைஐ விட்டுக் கொடுத்ததால், ரயில்வேக்கு ரூ.77 கோடி சேமிப்பு என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் பயணங்கள் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், கட்டணத்தில் தங்களுக்கான சலுகையை விட்டுக் கொடுத்ததன் மூலம், கடந்த 19 மாதங்களில் ரூ.77 கோடி சேமித்ததாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
19 மாதங்களில் 40 லட்சம் மூத்த குடிமக்கள், ‘விட்டுக்கொடுத்தல்’ திட்டத்தின் கீழ், கட்டண சலுகையை விட்டுக் கொடுத்துள்ளனர்.
இதனை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டு, சாதாரண குடிமக்களின் தேசப்பற்றை காட்டுகிறது என அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.