
ஹைதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் எச்சூரி மீண்டும் தேர்வு செய்யப் பட்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அவர் இரண்டாவது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார்.
ஞாயிற்றுக் கிழமை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது காங்கிரஸ் கூட்டத்தில் இரண்டாவது முறையாக அவர் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப் பட்டார். எச்சூரியின் தேர்வு, வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியை சரியான முறையில் கொண்டு செல்ல உதவும் என்று கூறப்பட்டது.
கட்சியின் இரண்டு பிரிவாகப் பிரிந்து செயல்படும் பிரகாஷ் காரத் மற்றும் சீதாராம் எச்சூரி இரு பிரிவுகளை கண்காணித்து சரிசெய்ய 95 நபர்கள் கொண்ட மத்திய கமிட்டி ஒன்றும் தேர்வு செய்யப் பட்டுள்ளது.



