உத்திர பிரதேசத்தின் ஹருனி ரயில்வே ஸ்டேசனில் ரயில் வரும் பிளாட்பாரத்தை கடைசி நிமிடத்தில் மாற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பலர் முண்டியடித்து கொண்டு ஓடினர். இதனால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெ

ரிசலில் சிக்கி 25 வயது இல்னர் ஒருவர் ரயில்வே டிராக்கில் விழுந்து பலியானார். இதுமட்டுமின்றி கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்த தொடர்ந்து நுற்றுக்கணக்கான பயணிகள் ஒன்றாக சேர்ந்த ரயில் நிலையத்தை சூறையாடினர். பயணிகளின் கோபத்தை கண்ட ரயில்வே நிலைய மேலாளர் தலைமறைவாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



