பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு நடிகர் எஸ். வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சினிமா, தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும், பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினருமான எஸ்.வி. சேகர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பகிர்ந்திருந்த ஆபாச கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மயிலாப்பூரில் உள்ள எஸ்.வி. சேகர் வீட்டி
ன் மீது கல் எறிந்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதை தொடர்ந்து தான் தெரியாமல் அந்த பதிவை பதிவிட்டு விட்டேன் என்று எஸ். வி சேகர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இதை பத்திரிகையாளர்கள் ஏற்று கொள்ளவில்லை. இந்நிலையில்,
பெண் பத்திரிகையாளர்களைப் பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளில் நடிகர் எஸ்.வி.சேகர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, எஸ்.வி. சேகர் தலைமறைவாகவே இருந்து வந்தார்.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு நடிகர் எஸ். வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.



