என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அது குறித்து கவலைப்பட போவதில்லை. வாக்காளர்கள் மீது எனக்கு நம்பிகை உள்ளது, அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்று பதாமி தொகுதியில் போட்டியிடும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள 223 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் மே 12ம் தேதி சனிகிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிகை மே 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் சித்தராமையா சாமுண்டேஸ்வரி மற்றும் பதாமி தொகுதியில் ஆகிய இரு தொகுதியில் போட்டியிட உள்ளார். பாரதீய ஜனதா கட்சி சார்பில் எடியூரப்பா ஷிகாரிப்புரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கர்நாடாகாவில் தொங்கு பாராளுமன்றமே அமையும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 112 தொகுதி எந்த கட்சிக்கும் கிடைக்காது என்று தெரிகிறது.
ABP செய்தி நிறுவனம், பாரதீய நாதா 89 முதல் 95 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும், இந்தியா டுடே, காங்கிரஸ் 90 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் டிவி9, காங்கிரஸ் 102 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கின்றன.