குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக தேசியபசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த மார்ச் 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் தீ ஏற்பட்டது. இந்த விபத்தில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற 36 பேர் தீயில் சிக்கி அதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சைப் பலனின்றி தற்போது வரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குரங்கணியில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



