சிறுமிகளை இந்த அளவுக்கு சீரழிப்பதற்குக் காரணம், ஆபாச இணையதளங்களே! அவற்றை தடை செய்ய வேண்டும் என்று கோரி, மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காஷ்மீர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல இடங்களில், சிறுமியரை வன்கொடுமை செய்து சீரழிப்பது அதிரித்துள்ளது. ஆபாச இணைய தளங்கள் ஏராளமானவை புழக்கத்தில் இருப்பது, சுலபமாக கைகளில் கிடைப்பது இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, ஆபாச இணைய தளங்கள் மற்றும் சினிமாக்களை தடை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.