மலையாள துப்பறியும் புனைகதை எழுத்தாளர் கோட்டயம் புஷ்பனாத் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. அவரது இறுதி சடங்கு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
300-க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள இவர் தனது கதைக்காக மார்க்ஸ் மற்றும் புஷ்பராஜ் ஆகிய பெயர்களை டிடெக்டிவ்களாக பயன்படுத்தி வந்தார். வரலாற்று ஆசிரியாராக பணியாற்றி வந்த இவர், எழுத்துப்பணிக்காக தனது வேலையை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்டினல்ட் தஹ்ராம், நேபோலியான் சிலை, யாசிக்காவ், லண்டன் கொட்டாராதலை ரகசியநாகல், பிரம்மராக்ஸஸ், டொர்னாடோ, கொலை, தாகுலா கோட்டா மற்றும் டெவில்’ஸ் கார்னர் போன்றவை அவர் எழுதிய பிரபலமான நாவல்களாகும்



