அஜித்தின் 57வது படமான ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் கேரக்டரில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளார்.
மேலும் ‘விசுவாசம்’ திரைப்படம் யோகிபாபுவின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணிய சிவா இயக்கிய ‘யோகி என்ற படத்தில் அறிமுகமாகிய யோகிபாபு, அஜித்துடன் நடிக்கும் படம் தனக்கு 100வது படமாக அமைவதில் பெரும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் அமைந்த ‘விசுவாசம்’ படத்தில் யோகிபாபு, அஜித்துக்கு உறவினராக நடிக்கவுள்ளதாகவும், இவருடைய கேரக்டர் படத்தின் சின்னச்சின்ன திருப்புமுனைக்கு உதவும் கேரக்டர் என்றும் கூற்ப்படுகிறது.



