உத்தரபிரதேசம் முழுவதும் கடுமையான மழை மற்றும் புயல்கள் வீசி வருகிறது. இந்த மழை மற்றும் புயல்லில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், ஆக்ராவில் 36 பெரும், பிஜ்னூரில் முன்று மற்றும் சஹாரான்பூரில் இரண்டு, பெரேலிலில் மற்றும் மொரதாபாத் மற்றும் ராம்பூர் ஆகிய இடங்களை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 45 பேர் பலியாகியுள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவராண நிதியாக வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.