கடந்த 2017ம் ஆண்டில் ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளுக்கான டாப் 5 பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ராணுவத்திற்கு 610 பில்லியன் டாலர் செலவிட்டு வரும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ராணுவத்திற்கு 69.4 பில்லியன் டாலர் செலவிட்டு வரும் சவுதி அரேபியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியா, கடந்த 2017ம் ஆண்டில் ராணுவத்திற்கு 63.9 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. இது அதற்கு முந்தை ஆண்டை ஒப்பிடும் போது 5.5 சதவிகிதம் அதிகமாகும்.