கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் மே 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளான பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வெளியிட்டார். அதில், தமிழகத்தில் அம்மா உணவகம் போல, கர்நாடகாவில் அன்னபூர்ணா உணவகம் திறக்கப்படும். 1 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். வரும் 2023க்குள் 1.5 லட்சம் கோடி செலவில் நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையிலும் காவிரி பற்றி குறிப்பிடாதது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை: காவிரி விவகாரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari