நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்கும் பெங்களூரு நகரத்தை, மிக மோசமான பாவ நரகமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றி விட்டார் என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்கட்சியான பாரதீய ஜனதாவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. பெங்களூருவில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘சிலிகான் வேலி’ தற்போது சிலிகான் நரகமாகி விட்டது. ‘கார்டன் சிட்டி’ தற்போது கார்பேஜ் (குப்பை) சிட்டி ஆகி விட்டது கம்யூட்ட்ர் கேபிடல் கிரைம் கேபிடலாகி விட்டது. ஸ்டார்ட் ஹப் தற்போது ஓட்டை ஹப் ஆகி விட்டது. பெங்களூரு நகரத்தில் மிக மோசமான கலாச்சார சீரழிவு ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் ஆளும் காங்கிரஸூம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுமே காரணம் என்றார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari