சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதிநீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு நிராகரித்தார். இதனை எதிர்த்து காங்., எம்.பி.,க்கள் பிரதாப் சிங் பஜ்வான் மற்றும் அமீ ஹர்ஷாதி ராய் யாஜ்னிக் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவையில் கண்டனம் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் கொடுத்த நோட்டீஸ் அளித்தது. தீபக் மிஸ்ரா, நீதித்துறை நிர்வாகத்தை தவறாக பயன்படுத்துகிறார், சக நீதிபதிகளின் அதிருப்திக்கு ஆளானவர் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக்கோரி 64 எம்பிக்கள் கையெழுத்திட்ட கண்டன தீர்மானத்திற்கான நோட்டீஸை மாநிலங்களவை தலைவராகவும் உள்ள வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் வழங்கினர்.
தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரும் நோட்டீஸை துணை குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
இந்நிலையில், இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.