மறுவீடு வந்த புதுமண தம்பதிகள்! மயங்கி விழுந்து இறந்த மனைவி!

சற்றுமுன் தமிழகம்
dead body

சினியோன் (வயது 37) என்பவர் ஆற்காடு அருகே பெருமுகை பகுதியை சேர்ந்தவர். இவர் அதே பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலை ஒன்றி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி (வயது 30). இவர்கள் இருவருக்கும் கடந்த 5ஆம் தேதி தான் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் புதுமண தம்பதியான அவர்கள் அறப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு மறுவீடு சென்றுள்ளனர். அப்போது கனிமொழி அங்கு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் பதறிய அவர்கள் உடனே கனிமொழியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.