என் பாதயாத்திரையில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை: அன்னா ஹசாரே

Published:

anna-hazare புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் மசோதாவுக்கு எதிராக சமூக சேவகர் அன்னா ஹசாரே, மகாராஷ்டிரத்தின் சேவாகிராமில் இருந்து தில்லி வரையிலான பாதயாத்திரையை வரும் மார்ச் 25ஆம் தேதி தொடங்குகிறார். சேவாகிராம் மாகாத்மா காந்தி ஆசிரமம் அருகே உள்ள பயணியர் மாளிகையில் இது தொடர்பாக தன் உதவியாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களிடம்  பேசியபோது, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவிற்கு எதிரான பாதயாத்திரை, மார்ச் 25ல் சேவாகிராமில் இருந்து துவங்கும். ஏப்ரல் 27ஆம் தேதி தில்லியில் நிறைவடையும்.  தில்லி ராம்லீலா மைதானத்தில் நிறைவடையும் பாதயாத்திரையின் பொதுக்கூட்ட மேடையில் அரசியல் தலைவர்களுக்கு அனுமதி கிடையாது. பாதயாத்திரை மேற்கொள்ளப்படும்போது அதில் வன்முறைக்கு இடம் கிடையாது. வன்முறை நிகழ்ந்தால் பாதயாத்திரை அப்போதே நிறுத்தப்படும்… என்றார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img